கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவ காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NHIS பிடித்தம் மேற்கொள்வதில் உள்ள மாற்றங்கள் தொடர்பான விளக்கம்

 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் NHIS பிடித்தம்  மேற்கொள்வதில் உள்ள மாற்றங்கள் தொடர்பான விளக்கம் 


மனைவி மத்திய அரசும் கணவன் மாநில அரசு அலுவலர் அல்லது ஓய்வூதியராக இருந்தால் என்ன செய்ய வேண்டும். 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இல்


IFHRMS இல் பிடித்தம் மேற்கொள்வதில் கணவன் மனைவி என இருவரும் அரசு பணியாளர்கள் எனில் இருவரில் எவர் இளையவரோ அவரிடம் மட்டுமே பிடித்த மேற்கொள்ளப்படும்


IFHRMS இல் கணவன் அல்லது மனைவி spouse employee என்று தேர்வு செய்து பதிவேற்றம் செய்தவுடன் மாத ஊதியத்தில் வயதில் மூத்தவருக்கு பிடித்த மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது automatic ஆக நிறுத்தம் செய்யப்படும்.


செப்டம்பர் மாத ஊதியத்தில் NHIS இல் மாற்றங்கள் ஏற்படும்.





NHIS 2026ல் மருத்துவம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியல்



List of hospitals approved for medical treatment under NHIS 2026


01.07.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கான புதிய உடல்நல காப்பீட்டு திட்டத்தில் NHIS 2026 மருத்துவம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியல் 


பக்க எண் 36 முதல் 192 வரை 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

 


NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

(பதிவு எண்.133/2021)

மாநில மையம்

எண்.3(G-1), கிருஷ்ணப்பத் தெரு,

சேப்பாக்கம், சென்னை – 600 005.


பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,


…………………………….. நாளிதழ்/ஊடகம்.


ஐயா,

வணக்கம். எங்களது அமைப்பின் சார்பாக கீழ்காணும் பத்திரிகை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

          பத்திரிகை செய்தி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்ட வெளியிட்ட பத்திரிகை செய்தி.


*************************************

அரசு ஊழியர்களின் காப்பீட்டுக்காக ரூ.1,489.75 கோடி பிடித்தம்! மருத்துவச் செலவாக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? — RTI தகவலில் அதிர்ச்சி. Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம். வழங்கப்பட்டது ரூ.3.56 கோடி மட்டுமே! மீதத் தொகை எங்கே? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

*************************************


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1,489.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


✍️🔥தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல்லைச் சேர்ந்த Frederic Engels பெற்ற தகவலில், 01.07.2021 முதல் 30.06.2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் NHIS திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.14,897,450,208 (சுமார் ரூ.1,489.75 கோடி) பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்காமல், அவற்றை United India Insurance Company-யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


✍️🔥ரூ.28.16 கோடி Corpus Fund-ல் ரூ.3.56 கோடி மட்டுமே !

இதனைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து NHIS திட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.3.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் ரூ.24.60 கோடி Corpus Fund தொகையின் நிலை மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான கணக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.


✍️🔥அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது மருத்துவப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரமே RTI பதிலில் வழங்கப்படாதது, NHIS திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.


✍️🔥இது பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா. பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்…. 


‘Cashless Treatment’ என்ற பெயரில் ஊழியர்களே பணம் செலுத்தும் அவலம்!


✍️🔥NHIS திட்டம் “Cashless Treatment” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் Package Rate System மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், மருத்துவமனையின் உண்மையான செலவுக்கும் காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் Package தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஊழியர்களே தங்களது கையிலிருந்து செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது.


✍️🔥உதாரணமாக, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உண்மையான செலவு ரூ.30,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதய Stent சிகிச்சைக்கு ரூ.1,17,000 வரை செலவாகும் நிலையில் ரூ.85,000 மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ஏற்கனவே அரசிடம் அளித்துள்ள முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


✍️🔥இதனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊதியத்திலிருந்து பணம் செலுத்திய பிறகும், சிகிச்சைக்காக மீண்டும் தங்களது கையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.


* புதிய NHIS-2026 – முந்தைய திட்டத்தைவிட மோசமானதா?


✍️🔥தற்போது வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.122, Finance (Health Insurance) Department, dated 24.06.2026 மூலம் புதிய NHIS-2026 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Package Rate System-ஐ நீக்குவதற்குப் பதிலாக, அது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய திட்டத்தில், மாதாந்திர பிடித்தம் ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Corpus Fund பிடித்தம் ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


✍️🔥 Network அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவ உதவி 75%-லிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Package System மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் A1, A2, B, C என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயச் சேர்க்கை தொடர்கிறது.


✍️🔥இதனால், முந்தைய ஆட்சியில் “Cashless Treatment” என்ற பெயரில் மறைமுகமாக Package System நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு நேரடியாகவே Package System-ஐ மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.


✍️🔥முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும்:

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது, எத்தனை ஊழியர்கள் பயனடைந்தனர், எந்தெந்த சிகிச்சைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, நிர்வாகச் செலவாக எவ்வளவு செலவிடப்பட்டது என்பன உள்ளிட்ட முழுமையான கணக்கை தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல், ஊழியர்களிடமிருந்து Corpus Fund-ஆக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் ரூ.24.60 கோடியின் நிலை என்ன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.


✍️🔥புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான 100 சதவீத Cashless Treatment வழங்கப்பட வேண்டும். Package Rate System கைவிடப்பட்டு, மருத்துவமனையின் உண்மையான மருத்துவச் செலவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்டாயமாக திணிக்கப்படும் முறையை கைவிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


✍️🔥இந்திய வங்கி ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையான மருத்துவச் செலவை ஈடுசெய்யும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


✍️🔥G.O.Ms.No.122-ஐ உடனடியாக மறுஆய்வு செய்து, Package Rate System-ஐ கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்யும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 


✍️🔥நாளது தேதியில் எத்தனையோ தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பணமில்லா சிகிச்சையைத் தருவதாக பல்வேறு தளங்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழியர்களின் தன்விருப்பம் கோரப்பட வேண்டும். விருப்பமில்லாத ஊழியர்களை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 20.08.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்மதிப்புகளுடன்


(எஸ்.ரமேஷ்)

மாநிலத் தலைவர்


(இரா.பாலசுப்ரமணியன்)

பொதுச் செயலாளர்




EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

NHIS Cardல் சேர்க்க Kalanjiyam செயலியில் குடும்ப உறுப்பினர்களின் தகவல் Update செய்யும் வழிமுறை


NHIS Cardல் சேர்க்க Kalanjiyam செயலியில் குடும்ப உறுப்பினர்களின் தகவல் Update செய்யும் வழிமுறை


 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது.


* NHIS - Family

* Member  update*

* Enhancement


தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 


2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 

 


3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் செல்லவும் 



4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 


5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 


6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது அல்லது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 


7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும். பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 


8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் Add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 


9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும். தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.


10. அரசு ஊழியர் புகைப்படத்தை ஏற்ற, செயலியின் இடது மேல் புறத்தில் 👤முகம் போன்ற ஐகானை தொட்டால் நமது விவரம் இருக்கும் அதில் மேலே பேனாவை தொட்டால் புகைப்படம் ஏற்றலாம்.


இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


களஞ்சியம் appல் உள் நுழைந்து குடும்ப விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதில் ஏதேனும் தவறுகள் இருக்கும் போது அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால், நாமே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.




NHIS 2026 E CARD Download செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்



புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்


2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட  NHIS புதிய காப்பீட்டு  அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும் 


உள்ளீடாக

IFHRMS ID NO

DOB


தர வேண்டும்


கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇


https://tnnhis2016.com/TnHome.aspx


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல் 



காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.


Medi Assist  என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India  என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது 


Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.


எனவே இந்த நிறுவனம் செயல்படும் 20 மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது பதிவிறக்கம் செய்ய இயலாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.


எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த நிறுவனம் என்ற விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under NHIS 2026

 


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2026-ன் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பு பெறுவதற்காக, பணியாளர் மற்றும் தகுதியுள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அளிப்பதற்கான படிவம்.


Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026


  • ANNEXURE-III : CERTIFICATE TO BE ISSUED IN LIEU OF IDENTITY CARD UNDER THE NEW HEALTH INSURANCE SCHEME, 2026.

  • ANNEXURE- VI  : NEW HEALTH INSURANCE SCHEME, 2026  for Employees of Govt. Departments covered under this Scheme. Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026 to Insurance Company/Third Party Administrator.

  • Details of the Employee and their eligible Family Members under the NHIS, 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



NHIS eCard பெற IFHRMSல் Family Members Details மற்றும் புகைப்படம் Upload செய்யும் வழிமுறை



NHIS eCard பெற IFHRMSல் Family Members Details மற்றும் புகைப்படம் Upload செய்யும் வழிமுறை


IFHRMS Portal ல் செய்ய வேண்டியவை


NHIS CARD இனி IFHRMS ல் வழியாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதால், IFHRMSல் Family Members Details மற்றும் புகைப்படம் upload செய்ய வேண்டும். வழிமுறைகள் பின்வருமாறு 


IFHRMS Login

↓

eServices(HR & Fin)

↓

Human Resource

↓

Employee Profile

↓

Advance Search

↓

Employee Number enter and GO button click

↓

update icon click

↓

Select Effective Date

↓

Continue

↓

Employee Details page shown

↓

Update Details

↓

Update Family Member (With Photo Upload)

↓

Update Profile Image



NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card

 


NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card


NHIS 2026 to Tamilnadu Government Employees:


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID  விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department  Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)


இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும்   e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது   குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



NHIS குறைபாடுகளை களைய வேண்டும் | அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைபாடுகளை களைய வேண்டும்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


"புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்" என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக்அலி தெரிவித்தார்.


ஜூன் 24ல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதில் அனைவருக்குமான கட்டணமில்லா உத்தரவாத சிகிச்சையை உறுதிப்படுத்த  வேண்டும். உயர் சிகிச்சைக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்கக்கூடாது. வெளி நோயாளிகள் சிகிச்சை நடைமுறைகளை திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமி யோபதி ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகளை இணைக்க வேண்டும்.


பயனாளியின் சிகிச்சைக்கான முழுத் தொகையையும் எளிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ல் பெரும் திரள் முறையீடு செய்ய உள்ளனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக் அலி கூறியதாவது: கட்டணமில்லா சிகிச்சை என்பதற்காக   அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டுகளில் 5  கோடிகளை தங்களது சந்தா தொகையாக செலுத்தியுள்ளோம். இருப்பினும் அரசால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அறிவிக்கப்பட்ட முழுத் தொகையில் பாதி அளவு தொகை கூட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பயனாளிகள் பெற முடி யாமல் தவிக்கிறோம். அதனால் 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்திய அரசாணை வெளியிட முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்த கவன ஈர்ப்பு முறையீட்டை நடத்த உள்ளோம் என்றார்.



NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை



NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை G.O.Ms.No.122, Dated : 24-06-2026


 புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை (நிலை) எண் : 122, நாள் : 24-06-2026 வெளியீடு..


1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.

2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.

3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




அரசாணையின் முக்கியமான தகவல்கள்


வாழ்க்கைத் துணைவர் மத்திய அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியராகவோ / ஓய்வூதியதாரராகவோ இருந்தாலும், அனைத்து ஊழியர்களுக்கும் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், 2026-இன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும்; இது ஒரு தனித் திட்டமாகும்.


 இத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுத் துறை ஊழியர்களும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களும், இந்த உத்தரவின் இணைப்பு-II-இல் பட்டியலிடப்பட்டுள்ளபடி, புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் 2026-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில், இந்த உத்தரவின் இணைப்பு-I-இல் பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள்/அறுவை சிகிச்சைகளுக்காக, 01-07-2026 முதல் 30-06-2031 வரையிலான ஐந்தாண்டுத் தொகுதியில், தொகுப்பு விகித அடிப்படையிலான பணமில்லா வசதியாக ரூ.7.50 லட்சம் (ஏழு இலட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்) வரையிலான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்;


(அ) ​​இருப்பினும், இந்த உத்தரவின் இணைப்பு IA-வில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு லட்சம் ரூபாய்) வரை இருக்கும்.


(ஆ) இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஐந்து வருடத் தொகுதிக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் ஒட்டுமொத்த வரம்பு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு லட்சம் ரூபாய்) வரை இருக்கலாம்.


 (இ) அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள், அவசரமற்ற சூழ்நிலைகளில் நெட்வொர்க்கில் சேராத மருத்துவமனையில் பெறும் மருத்துவ சிகிச்சையும், திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் ஈடுசெய்யப்படும். இருப்பினும், அத்தகைய நேர்வுகளில் திருப்பிச் செலுத்தப்படும் தொகையின் அளவு, இணைப்பு-IV-இல் பட்டியலிடப்பட்டுள்ள அனுமதிக்கப்படாத/செலுத்தப்படாத செலவினங்களைத் தவிர்த்து, பெறப்பட்ட சிகிச்சை/செயல்முறைக்காக மிகக்குறைந்த தரத்திலான நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இதேபோன்ற சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பொருந்தக்கூடிய தொகுப்பு விகிதத்தில் 60% என வரையறுக்கப்படும்.


(ஈ) இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்தும் வகையில், 07.06.2024 தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (EAP-1) அரசாணை (Ms) எண்.130-இன் படி, புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் 2021-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 1535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களும், இணைப்பு I-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 2992 சிகிச்சைகள் / செயல்முறைகளையும், இணைப்பு IA-இன் (குறிப்பிட்ட நோய்) கீழ் 46 சிகிச்சைகள் / செயல்முறைகளையும் உள்ளடக்குகின்றன. சேர்க்கப்பட வேண்டிய / நீக்கப்பட வேண்டிய மருத்துவமனைகளின் பட்டியலானது, CMCHIS-தமிழ்நாடு திட்டத்திற்காக, தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் (TNHSP) திட்ட இயக்குநரின் கீழ் உள்ள அங்கீகாரக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆணையர் / கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநரால் உத்தரவிடப்படும்.


(இ) ஆண்டு காப்பீட்டுத் தொகை செலுத்துதலானது, தமிழ்நாடு அரசுக்கும் சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஒழுங்குபடுத்தப்படும்;


01-07-2026 முதல் 30-06-2031 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு, சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய ஆண்டு பிரீமியம், ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு) என்ற விகிதத்தில் இருக்கும்;


 குறிப்பிட்ட நோய், அரிதான நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பான அதிக செலவுகளை ஈடுகட்டுவதற்காக, அரசுத் துறைகளின் அனைத்து ஊழியர்களும், மாதாந்திர சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத்துடன் சேர்த்து, மாதத்திற்கு ரூ.15/- தொகையை தனியாக மூலதன நிதிக்கு (காலாவதியாகாதது) பங்களிக்க வேண்டும். இதன் மூலம் மூலதன நிதியின் கீழ் ரூ.15.00 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்படும். ஐந்து வருட காலக்கட்டத்தில், மூலதன நிதியின் கீழ் வழங்கப்படும் உதவியையும் சேர்த்து, ஒரு குடும்பத்திற்கு ரூ.27.00 லட்சம் (இருபத்தேழு லட்சம் ரூபாய்) வரையிலான ஒட்டுமொத்தப் பலன் கிடைக்கும்.


 அரசாங்கத்தால் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட ஆண்டு பிரீமியம், ஜூலை, 2026 மாதம் முதல் மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்வதன் மூலம், ஊழியர்களிடமிருந்து மாதம் ரூ.390/- (முந்நூற்று தொண்ணூறு ரூபாய்) [NHIS-க்கான சந்தா ரூ.375/- + மூலதன நிதிக்கான பங்களிப்பு ரூ.15/-] என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும். ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகைக்கு மேலாக அவ்வப்போது செலுத்த வேண்டிய பிரீமியத்தின் எந்தவொரு உபரித் தொகையையும், அரசு ஊழியர்களின் விஷயத்தில் அரசாங்கமும், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைச் சேர்ந்த ஊழியர்களின் விஷயத்தில் அந்தந்த முதலாளியும் ஏற்க வேண்டும்;


 சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணைவர் 'பணியாளர்' என்ற சொல்லின் கீழ் வந்தாலும், இணைப்பு-I இல் உள்ள நோய்களுக்கு குடும்பத்திற்கான மொத்த உதவித்தொகை ரூ.7.50 லட்சம் (ஏழு இலட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்) ஆகவும், இணைப்பு-IA இல் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு இலட்சம் ரூபாய்) வரையிலும் வரையறுக்கப்படும். ஐந்து வருட தொகுதி காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு இலட்சம் ரூபாய்) வரையிலான ஒட்டுமொத்த உதவித்தொகை வரம்பு.


 பணியாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருந்தால், பணியாளரின் பங்களிப்பு இருவரில் இளையவரிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும்.


(அ) ஒருங்கிணைந்த ஊதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் 

(ஆ) தினக்கூலி 

(இ) ஒப்பந்த அடிப்படையில் 

(ஈ) மறுவேலைவாய்ப்பு 

(உ) தமிழ்நாடு மாநில விதி 10(அ)(1)-இன் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக அடிப்படையில் மற்றும் 

(ஊ) வெளிப்பணியமர்த்தல் ஆகியவற்றின் கீழ் பணியமர்த்தப்பட்ட மனிதவளம் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லை.


சிறப்பு நேர ஊதிய விகிதத்தின் கீழ் வரும் துப்புரவுப் பணியாளர்கள்/ சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி, மதிய உணவுப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற அனைத்து ஊழியர்களும் புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்-2026-இன் கீழ் கொண்டுவரப்படுவார்கள். இருப்பினும், சிறப்பு நேர ஊதிய விகிதத்தின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களில், யாருடைய மொத்த ஊதியம் [அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி]/ ஒருங்கிணைந்த ஊதியம் மாதத்திற்கு ரூ.10,000/-க்கும் குறைவாக உள்ளதோ, அவர்களிடமிருந்து NHIS-2026-க்கான சந்தாத் தொகை கழிக்கப்படாது. மேலும், அத்தகைய ஊழியர்களுக்கான சந்தாத் தொகையை 01.07.2026 முதல் 30.06.2031 வரையிலான காலத்திற்கு அரசாங்கம் ஏற்கும்.


இந்தத் திட்டம், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், மற்றும் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாநில அரசு அமைப்புகள்/நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், தேவையான மாற்றங்களுடன் நீட்டிக்கப்படும். இந்த நிறுவனங்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு, மாநில நிதிநிலை அறிக்கைக்கு நிதிப் பொறுப்பு ஏற்படாத வகையில், முதலாளியின் பங்கு பிரீமியத்தைச் செலுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஊழியர்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் பிரீமியம் செலுத்துவதற்கு உட்பட்டு, அவர்களது முதலாளி நேரடியாக சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படலாம். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடனான ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து காப்பீட்டுக் காப்பீடு நடைமுறைக்கு வரும். மேற்கூறிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் / நிர்வாக இயக்குநர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், 2026-இன் நிர்வாகியாக இருப்பார்கள்.



இந்த NHIS 2026 தொடர்பான மேற்கண்ட கோப்பில் உள்ளடங்கியுள்ள தகவல்கள்


ANNEXURE - A to G.O.Ms. No122, Finance (Health Insurance) Department, Dated:24.06.2026

THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2026 FOR EMPLOYEES OF GOVERNMENT DEPARTMENTS AND THEIR ELIGIBLE FAMILY MEMBERS


ANNEXURE I & ANNEXURE IA (WILL BE PUBLISHED ON THE NHIS PORTAL)

Short Manual for Rate Calculation


ANNEXURE – II to the Guidelines

LIST OF EMPANELLED NETWORK HOSPITALS  FOR PACKAGE RATE BASED cashless TREATMENT UNDER NHIS, 2026


ANNEXURE-III

CERTIFICATE TO BE ISSUED IN LIEU OF IDENTITY CARD UNDER THE NEW HEALTH INSURANCE SCHEME, 2026. 


ANNEXURE-IV (See Guidelines)

NON-PAYABLE ITEMS


ANNEXURE - V

TOLL FREE HELPLINE NUMBER AND LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEAD QUARTERS.



ANNEXURE- VI

NEW HEALTH INSURANCE SCHEME, 2026 for Employees of Govt. Departments covered under this Scheme 

Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026 to Insurance Company/Third Party Administrator.



ANNEXURE- VII

LIST OF ADDRESS OF GRIEVANCE REDRESSAL OFFICERS


ANNEXURE- VIII

LIST OF ADDRESS OF DISTRICT LEVEL EMPOWERED COMMITTEE,

STATE LEVEL EMPOWERED COMMITTEE AND HIGH-LEVEL EMPOWERED COMMITTEE UNDER NHIS, 2026

(a) DISTRICT LEVEL EMPOWERED COMMITTEE

(b) STATE LEVEL EMPOWERED COMMITTEE

The Commissioner/Director of Treasuries and Accounts,

O/o Directorate of Treasuries and Accounts,

3rd Floor, Integrated Office Complex for Finance Department,

Veterinary Hospital Campus,

Anna Salai, Nandanam,

 Chennai - 600 035.

 (c ) HIGH LEVEL EMPOWERED COMMITTEE

The Additional Chief Secretary to Government,

Finance Department, Fort St. George, Secretariat,

Chennai - 600 009.


Short Manual for Rate Calculation


Corrigendum - 1: ANNEXURE I & IA and Package Rates

ANNEXURE - I : List of Procedures and Treatments under NHIS 2026 and their packages rates

NEW HEALTH INSURANCE SCHEME, 2026 FOR EMPLOYEES OF THE GOVERNMENT DEPARTMENTS AND THEIR ELIGIBLE FAMILY MEMBERS


ANNEXURE - IA : List of Procedures and Treatments under NHIS 2026 and their packages rates


Implant Master


Stratification Master


Stratification Vs Procedure


Diagnostic Procedures


Implant Vs Procedure


Add on Speciality


Follow up to Procedure


Add on non related


Procedure vs. SP POP up mapping


Procedure vs. SP rule mapping


Investigation Master




NHIS 2026 சுருக்கம்



தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் NHIS 2026 சுருக்கம்






NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி

 


NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி


NHIS மருத்துவ காப்பீடு திட்டத்தில் Networkல் இல்லாத மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சை (Reimbursement) தொகையை திரும்ப பெறுவதற்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது


இனி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் / வட்டார கல்வி அலுவலரிடமிருந்து கடிதம் அனுப்ப வேண்டிய புதிய முகவரி குறித்த கடிதம்


NHIS அலுவலகம் முகவரி மாற்றப்பட்டுள்ளது - Pay and Accounts Officer கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NHIS NEW OFFICE ADDRESS


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address


DEPARTMENT OF TREASURIES AND ACCOUNTS


From

Pay and Accounts Officer,

Pay and Accounts Office (South),

Amma Complex, 1st Floor,

NO.571 Anna Salai,

Nandanam, Chennai -600 035.


To

AII DDOs


PAO(South)/BAS III/12580/2024 dated 28/10/2024

Sir/Madam,

Sub : New Health Insurance Scheme 2021 - United Insurance Co Ltd's Divisional Office - shifted -New Address communicated -Regarding.


Ref : 1. Letter received from the commissioner of Treasuries and Accounts, Rc.No.30655/NHIS-2/2024 Dated 21-03-2024


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings,(Behind IDBI Bank),

Greams Road, Chennai-600 006"

Therefore the reimbursement claims may be send to the above address. And it is also informed that there is no change in the telephone numbers.

Asst Pay and Accounts Officer (South)

Chennai-35


NHIS 2021 - கூடுதலாக 126 மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 264 வெளியீடு

 

NHIS 2021 - கூடுதலாக 126 மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 264 வெளியீடு


G.O. Ms. No. 264 , Dated : 10-12-2025 - NHIS Additional Hospitals



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Einstein Box Ultimate Science Experiment Kit for Boys & Girls Ages 7-14 | Birthday Gifts Ideas for Kids | STEM Learning Educational Toys & STEM Toys for Boys 7-14 Years | Experiment Kit


https://amzn.to/3N4LgB1




தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு GST விலக்கு குறித்த தகவல்



தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு GST விலக்கு குறித்த தகவல் 


GST exemption for individual life insurance and medical insurance


இம்மாதம் 22-09-2025 முதல் தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், அக்டோபர் மாதம் முதல் ஏற்கனவே  மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வரும் PLI பாலிசிகளுக்கும், தனிப்பட்ட முறையில் எடுத்திருக்கும் Star health insurance போன்ற பாலிசிகளுக்கும் முன்பு பிடித்தம் செய்யப்பட்டது போல் பாலிசி தொகை (premium ) மட்டும் செலுத்தினால் போதுமானது. CGST & SGST தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




NHIS : Reimbursement claim documents acceptance time limit

NHIS மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுதல் : கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS 2021) : 01.07.2024 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, 19.09.2025க்குள் ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு


NHIS : Time frame for acceptance of Reimbursement claim documents - Letter from Director of Treasuries and Accounts 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்





 



G.O.Ms.No.145 , Dated : 24-06-2025 - Extension of NHIS 2021

 


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS 2021) மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு


G.O.Ms.No.145 , Dated : 24-06-2025 - Extension of the Scheme NHIS 2021



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NHIS - Reimbursement of medical claims pertaining to the treatment - To be placed in DLEC on or before 14.02.2025

 


NHIS - 01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்கள் / ஓய்வூதியர்கள், தங்களது செலவினத் தொகையை மீளப்பெற 14.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு


New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

From

Thiru.S.Nagarajan,IAS.,

Commissioner of Treasuries and Accounts

(FAC),

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai

No.571, Anna Salai,

Nandanam, Chennai-35


To

All District Collectors


Rc.No. 526 /NHIS-2/2024 Dated: 23-01-2025


Sir,

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025

Regarding.

Ref: 1.

G.O.Ms.(No).160, Finance(Salaries) Department, Dated:29.06.2021 

G.O.Ms.No.204, Finance (Health Insurance) Department, dated 30.06.2022

United India Insurance Company Limited, Chennai letter No.010600/Health / 2106 / 2024 dated 21.6.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 27.6.2024 addressed to the Government

The Government Letter No.29735/Finance (HI-2)/2023-2 dated 14.7.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 19.7.2024


I invite the kind attention to the references cited In the reference 6th cited, communication has been sent to all the District Collectors/ Treasury officers/ Pension Pay Officers / All Organisations /Director of Medical and Rural Health Services and Director of Medical Education (for providing TNMAR) to place the medical reimbursement claims pertaining to the treatment period from 01.07.2023 to 30.06.2024 in Dictrict Level Empowered Committee on or before 14.02.2025.

As mentioned in the reference 6 th cited, the cut-off date for forwarding the reimbursement claims to United India Insurance Company by the PPO/TOs/Head Office / Head of Organizations was 20.09.2024 and time has lapsed. In this connection, it is requested to place all the reimbursement claim documents for admissions from 01.07.2023 to 30.06.2024 in District Level Empowered Committee on or before 14.02.2025.

Hence, all the District Collectors are requested to give top priority this subject matter and issue necessary instructions to the Joint Director of Health Services / Treasury Officers to place all pending cases before the District Level Empowered Committee on or before 14.02.2025 and send the committee recommendations (for each case) to United India Insurance Company Limited / Commissioner of Treasuries and Accounts or concerned Head of Departments for settling reimbursement of medical claims to the individuals / petitioners without any delay.

This may be treated as most urgent.

S NAGARAJAN IAS

Commissioner of Treasuries and Accounts (FAC)

Copy

submitted to

The Principal Secretary to Government Finance (Health Insurance) Department Secretariat, Chennai 600 009

Copy to:

The Director of Medical and Rural Health Services, Chennai-06... With a

equest to issue suitable instructions to all Dleaith Servicacl to fave

necessary action.

The Director of Medical Education, Chennai-10... With a request to address

the Dean, Medical Colleges to provide TNMAR rate for cases recommended by

DLEC immediately.

The Pay and Accounts Officers- To communicate the cut off date to the DDOs

and inform the fact to CTA.

All RJDs- To take follow up action.

Pension Pay Officer, Chennai / All Treasury Officers... TO communicate the cut

off date to the DDOs/ Pensioners and to take necessary action to place the

pending cases in DLEC before 14.02.2025.

//Forwarded by order//



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NHIS - Madurai teacher ordered by High Court to pay medical expenses

 

 மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு


NHIS - Madurai teacher ordered by High Court to pay medical expenses


தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாநகராட்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனலெட்சுமி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு ரூ.1,22,254 செலவானது. இந்த தொகையை அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்பக் கோரி மனு அளித்தார். அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையை திரும்ப வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தனலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.


இதனை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு 12 வாரத்தில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 25.3.2019-ல் உத்தரவிட்டார். அதன்பிறகும் பணம் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட அளவிலான குழு பரிந்துரையின் பேரில் 4 வாரத்தில் பணம் வழங்க வேண்டும் என 28.11.2019ல் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி மாநில நிதித்துறை செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு விஷயத்தில் மாவட்ட அளவிலான குழுவின் முடிவு இறுதியாது. இந்தக் குழுவில் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். மருத்துவ செலவு தொகை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஆட்சேபம் இருந்தால் குழுவிடம் தான் தெரிவிக்க வேண்டும்.


மாவட்ட அளவிலான குழு மருத்துவ சிகிச்சைக்கான தொகையை வழங்க உத்தரவிட்டால் அந்தப் பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. அவ்வாறு மறுக்கும் அதிகாரம் காப்பீட்டு நிறுவனத்துக்கு கிடையாது. மாவட்ட குழுவில் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி இருப்பதால் மாவட்ட குழுவின் முடிவுக்கு மாறாக வேறு முடிவெடுக்க முடியாது.


இந்த வழக்கில் மாவட்ட குழுவின் பரிந்துரையில் பிரச்சினை இருந்தால் காப்பீட்டு நிறுவனம் மாநில அளவிலான குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. எனவே மாவட்ட குழு 25.9.2019-ல் எடுத்த இறுதியானது. அதன்படி ஆசிரியை தனலெட்சுமிக்கு 8 வாரத்தில் மருத்துவ செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 7 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வங்கி வேலை நிறுத்தம் காரணமாக நாளை (25-09-2026) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்/ ஓய்வூதியர்களுக்கு ஊதியம் வரவு வைக்கப்படும்

Bank strike  Tomorrow payment day வங்கி வேலை நிறுத்தம் காரணமாக நாளை  (25-09-2026) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்/ ஓய்வூதியர்களுக்கு ...