கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...



மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...


 வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பேர்ணாம்பட்டு கோயில் தெருவை சேர்ந்த பால்வண்ணன் (55) என்பவரும், மற்றொரு ஆசிரியரும் பணி புரிகின்றனர். 75 மாணவ, மாணவியர் மாச்சம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளாராம். உடனே தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை இதுபற்றி உம்ராபாத் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...