கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நன்றியில் செல்வம்


குறள் : 1002

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


பொருள்:

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்


பழமொழி :

Don't bargain for fish that is still in the water.

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


வாழ்க்கையில் நிறைய

பிரச்சனைகளை சந்தித்த

பின் அறிவையும் சில

இழப்புக்களை பார்த்த

பின் அதிக அடக்கத்தையும்

உணர்கிறோம்..!


பொது அறிவு :


1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன? 


ரிப்ஸ் .


 2.மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை யாது?


1400.


English words & meanings :


jan·gling - to produce a harsh sound. Verb. கடூர சத்தம் உருவாக்குதல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பெரும்பாலான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

சிறுநீரக செல்கள் மீது பாதுகாப்பை வழங்குகிறது. ப்ளூ பெர்ரி பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ் பரஸ் போன்ற பண்புகள் உள்ளன. க்ரான் பெர்ரி பழங்கள் சிறுநீர் பாதையை தொற்றுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.


NMMS Q 37:


ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கின் ஏழில் ஒரு பங்கு 20 எனில் அவ்வெண் _______. 


விடை: 1680


ஆகஸ்ட்  02


ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்


ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.


பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.


பிங்கலி வெங்கைய்யா


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை


நான்கு பொம்மைகள்


நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.


முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.


மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்


இன்றைய செய்திகள்


02.08.22


📍மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி.


📍நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


📍தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


📍இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார்.


📍புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள்: எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ திட்டம்.


📍கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


📍காமன்வெல்த் ஜூடோ போட்டி : சுசிலா தேவி இறுதி சுற்றுக்கு தகுதி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.


📍காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்.


📍காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.


Today's Headlines


📍Madurai Regional Arts, Science Colleges Counseling Begins: 73,260 Candidates for 14,430 Seats


 📍The Madras High Court has warned that if the court order to remove water encroachments is not implemented within 10 days, it will have to order the Chief Secretary to appear in person.


 📍The Tamil Nadu Public Service Commission has announced August 26 as the last day to apply online for the 16 vacant posts of Career Counselor and Social Officer.


 📍Union Minister of State for Tribal Affairs released the information in the Lok Sabha that the central government does not have the details of the relief for the displaced tribal people.


 📍Earth observation satellite 'Microsat-2A': ISRO plan to launch by SSLV rocket.


 📍Last July 29 Scientists reported that the Earth completed its one-day rotation around itself 24 hours earlier on that date.






 📍Commonwealth Judo Tournament: Susila Devi qualifies for finals - India assured of another medal


 📍Commonwealth Boxing Tournament: India's Amit Pangal advances to quarter-finals


 📍India's Achinda Shuli lifted 313 kg and won the gold medal in the Commonwealth Weightlifting Championships.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...