கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: இரவச்சம்


குறள் : 1064

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.


பொருள்:

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாத அளவுக்கு பெருமையுடையது.


பழமொழி :

 It is most blessed to give than to receive.


ஏற்பதைவிட இடுவது சிறப்பு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 


2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.


பொன்மொழி :


உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.


பொது அறிவு :


1.தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது? 


 பச்சோந்தி .


 2.ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?


 வரிக்குதிரை.



English words & meanings :


mag·ne·to·sphere - A region surrounding a planet, star etc. Noun. Our solar system has magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல். 


ஆரோக்ய வாழ்வு :


அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும்.


NMMS Q 60:


Book : Paper :: Table : ? a) School. b) Student. c) Wood. d) Chair. 


 Answer : Wood


செப்டம்பர் 15


திரு.கா.ந.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) அவர்களின் பிறந்தநாள்



அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில்  கைத்தறி நெசவாளர் நடராசன் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.


1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.


மொழிப்புலமை

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,


"No sentence can end with because because, because is a conjunction.

எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்”

என்று உடனே பதிலளித்தார்.


தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967–1968 இல் வழங்கப்பட்டது. அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை.


இறுதிக்காலம்

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர்,03 பிப்ரவரி 1969 இல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.


ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். 


அனைத்துலக சனநாயக நாள் 


அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.


நீதிக்கதை


கடமையே வெற்றி தரும்


ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.


தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.


குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.


இன்றைய செய்திகள்


15.09.22


* அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


* பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


* அண்ணா பிறந்த தினத்தையொட்டி மதுரையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், செப்டம்பர்-16 முதல் திட்டம் அமலாகிறது.


* குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைத்துள்ளது.


* தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


* இலங்கைக்கு இந்த ஆண்டில் மட்டும் 380 கோடி டாலர் உதவி - இந்தியா தகவல்.


* கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கார்க்கிவ் நகரின் முக்கிய இடங்களில் உக்ரைனின் கொடி உயர பறந்து வருகிறது.


* இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


* தேசிய டென்பின் பவுலிங் போட்டியில் தமிழக வீராங்கனை சபீனா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.


* உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் முன்னேற்றம்.


Today's Headlines


* On the occasion of Anna's birthday, Chief Minister M. K. Stalin has ordered to give Anna Medals to 127 Tamil Nadu police, uniformed officers and employees.


 *The incidence of flu fever among children is increasing all over Tamil Nadu.  Due to this, hospitals are overflowing.  100 children have been admitted in Egmore hospital in a single day.


 * Chief Minister M.K.Stalin launched the "Chirpi" program for the betterment of school students.


*  On the occasion of Anna's birthday, Chief Minister M. K. Stalin will inaugurate the breakfast program for government school students in Madurai today.  In other schools selected for this, the scheme will be implemented from September-16.


* Childline 1098, which is exclusively for children, has been running successfully for the past 26 years and has been merged with the central government's single helpline number 112.


* The Election Commission has ordered the suspension of 253 registered unauthorized political parties, including 14 parties from Tamil Nadu.


 * 380 crores in aid to Sri Lanka this year alone - India News


 * Ukraine has brought under its control the city of Kharkiv, which was under the control of Russian forces for the past 6 months.  Following this, the flag of Ukraine is flying high in the main places of Kharkiv city.


 * Australia's squad for the 3-match T20I series against India has been announced.


 * Tamil Nadu player Sabina has won the champion title in the National Tenpin Bowling Tournament.


 * Indian players Srikanth, Pranai progress in Badminton world rankings.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...