கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: இரவச்சம்


குறள் : 1066


இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.


பொருள்:


இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.


பழமொழி :

Lose nothing for want of asking.

கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 


2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.


பொன்மொழி :


வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே..!


பொது அறிவு :


1.இந்தியாவின் அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 


கல்கத்தா. 


2. மின்சாரத்தின் அலகு என்ன? 


ஆம்பியர்.


English words & meanings :


om·nis·cient - having total knowledge. Noun. God is omniscient. எல்லாம் அறிந்தவர்


NMMS Q 62:


நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எனில் நேற்றைக்கு மூன்று நாட்கள் முந்தைய கிழமை _________. 


விடை : ஞாயிறு


செப்டம்பர் 17


பெரியார் அவர்களின் பிறந்தநாள்


பெரியார் என்று அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.


நீதிக்கதை


மரம் தான் சாட்சி


குரு நாதரும் சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வானில் சூரியன் சுட்டெரித்தது. அதில் ஒரு சீடர் குருவே... கோவில் வழிபாடு செய்யாதவருக்கு இறைவனின் அருள் கிடைக்குமா? அல்லது அன்றாடம் அவரை வழிபடுபவருக்கு மட்டும் தானா? எனக் கேட்டார். வெயிலின் கடுமை அதிகம் என்பதால் அருகில் தென்பட்ட மர நிழலில் குரு ஒதுங்கினார். அவரை சீடர்களும் பின் தொடர்ந்தனர். குரு சந்தேகம் எழுப்பிய சீடரிடம் நீ எப்போதாவது இந்த மரத்துக்கு தண்ணீர் ஊற்றியதுண்டா? என்றார். இல்லை குருவே ஆனால் இப்போது வெயிலுக்கு ஒதுங்கினாயே எப்படி? குருவே எனக்கு நிழல் தர மரம் என்ன மறுக்கவா போகிறது?


இந்த மரத்தை படைத்ததே அந்த இறைவன் தான். இந்த ஓரறிவு உயிரே உனக்கு கைமாறு கருதாமல் அனைவருக்கும் நிழலும் கனியும் குளிர்ந்த காற்றும் வழங்கும்போது இறைவனின் பெருங்கருணைக்கு அளவேது? வழி பட்டாலும், வழிபடாவிட்டாலும் அவருக்கு ஒன்றுதான். உயிர்கள் அனைத்தும் அவரின் பிள்ளைகளே. தன்னை வழிபடாதவர்களுக்கும் எல்லா நன்மையும் அளிக்கவே செய்கிறார். அதற்கு சாட்சியாக இந்த மரம் இருக்கிறது. தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழலும் கனியும் கொடுத்து உதவத்தானே செய்கிறது. சம்மதிப்பது போல மரமும் காற்றில் தலையசைத்தது. சீடனின் கண்ணுக்கு மரம் கடவுளாகத் தெரிந்தது.


இன்றைய செய்திகள்


17.09.22


#தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



# மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


# அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 முதல் அக்.14-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில், நிறுவன நூல்கள் 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.



# நமிபியாவிலிருந்து கொண்டுவரப்படும்  சிவிங்கிப் புலிகள் இன்று குனோ தேசியப் பூங்காவில் விடப்படுகின்றன.


# ரஷ்ய படைகள் தாக்கிய பகுதிகளில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுக்கியுள்ளார்.



# மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து.


# சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருது: இந்தியாவின் சவிதா புனியா பெயர் பரிந்துரை.


# சென்னை ஓபன் டென்னிசில் போலந்தின் லினெட், இங்கிலாந்தின் ஸ்வான் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.


# ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி சாம்பியன்.


Today's Headlines


# The Madras High Court said that unless action is taken on a wartime basis to remove the alien trees in Tamil Nadu's forests, they will spread rapidly and have a serious impact and destroy the forest.



 # Rs 600 crore Tidal Park in Madurai: Chief Minister Stalin's announcement.


#  On the occasion of Anna's birthday, for a period of one month from September 15 to October 14, the Institute's books will be sold at a discount of 30 to 50 percent at the premises of the World Tamil Research Institute.


# Chivingi tigers brought from Namibia are released in Kuno National Park today.


 # Ukraine's President Zelensky has accused the country of human rights violations after finding piles of corpses in areas attacked by Russian forces.


 # Women's T20 Cricket: England beat India to win the series.


#  Best Women's Hockey Goalkeeper Award: India's Savita Punia Name Nomination


 # Poland's Lynette and England's Swan qualify for quarter-finals at Chennai Open Tennis.


 # Junior South Asian Football: Indian team won the championship. 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...