கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2022 - School Morning Prayer Activities...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2022 - School Morning Prayer Activities...


   திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: கயமை


குறள் எண் : 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.


விளக்கம்


பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.



பழமொழி :

Everything is good in it's reason.


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :


துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.


பொது அறிவு :


1.மனித உடலில் பிராண வாயு எடுத்துச் செல்வது எது? 


 ஹீமோகுளோபின் .


 2.குழல்கள் அற்ற சுரப்பியின் சுரப்பிற்கு என்ன பெயர்? 


 ஹார்மோன்.


English words & meanings :


re·mu·ner·a·tion - money paid for extra work or a service. Noun. She did the extra work without any remuneration. பணிக்கு வழங்கப்படும் பணபலன்


ஆரோக்ய வாழ்வு :


வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் உள்ளது. எனவே வல்லாரைக் கீரையை மன அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்து வந்தால் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகளை தீர்க்கிறது


NMMS Q 65:


Lid : Box :: Cork : ? 

a) Seal. b) Bottle. c) Drug. d)Carton.


 Answer : Bottle


செப்டம்பர் 21


சம இரவு நாள்


சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.


உலக அமைதி நாள்


உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது


இன்றைய செய்திகள்


21.09.22


* தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.


* தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குன்னத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.


* அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சியாச்சின் பனிமலையில் இணைய சேவை - செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது ராணுவம்.


* மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட 2,000 வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


* உலக மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா 4-வது முறையாக பதக்கம் வென்று சாதனை.


* ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம் - மன்கட் ரன் அவுட் முறைக்கு அனுமதி.


Today's Headlines


* In Tamil Nadu, the impact of dengue fever is increasing after the impact of flu. In the last one month alone, the number of cases has doubled.


 * Medical Department Minister M. Subramanian has said that special fever test camps will be conducted at 1000 places in Tamil Nadu today.


 * A 500-year-old Valari Veeran sculpture has been found at T.Kunnathur near T.Kallupatti in Madurai district.


 * The High Court has ordered that action should be taken against the officials who registered the deeds of unauthorized plots.


 * Army launches internet service in Siachen glacier


 * The body of the late Queen Elizabeth II of England was laid to rest with full state honors in the grounds of Windsor Castle. 2,000 foreign leaders and representatives including US President Joe Biden and Indian President Draupadi Murmu participated in the funeral.


 * Bajrang Punia won a medal for the 4th time in the World Wrestling Championship.


 * A drastic change brought by the ICC - Mancut run out system is allowed.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...