கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய சிறுகதை (Today's Short Story) - "நம்பலாமா, வேண்டாமா..?" ("Believe them or not..?")



இன்றைய சிறுகதை (Today's Short Story)

..................................................................

"நம்பலாமா, வேண்டாமா..?"
.....................................................

ஒருவரை நம்பலாமா, வேண்டாமா? என்பதைக் கண்டு பிடிப்பதற்குச் சிறந்த வழி அவரை நம்புவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எர்னெஸ்ட் ஹெம்ங்வே (Ernest Hemingway). என்ற மேல்நாட்டு அறிஞர்..

மனிதர்களை நம்புவதில் மட்டுமல்ல. எதன் பொருட்டாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்க வேண்டியது அவசியம்..

அழுத்தமாக, தீவிரமாகக்கூட வேண்டாம்.ஒரே ஒரு கணம் ஒன்றில் நம்பிக்கை வைத்தால் கூட அது நமக்கு நன்மையைத் தரும்..அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த காலகட்டம். அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த வீரன் ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவில் இருந்து பிரிந்து விட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக் கொண்டான்.

படைப் பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டுமே என்கிற ஏக்கம் ஒருபுறம். எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு விடக்கூடாதே’ என்கிற பயம் ஒருபுறம்.

அந்த கப்பற்படை வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது… உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது.

கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மை ஆக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான்.

செடிகளை விலக்கிக் கொண்டு, சருகுகளை மிதித்துக் கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம் உறுதியாகி விட்டது.நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும்.

என்ன செய்வது. ஒளிவதை தவிர வேறு வழியில்லை.
அவசர அவசரமாக ஒளிந்து கொள்ள ஏற்ற இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது.

அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது.விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்துகொண்டான்.

கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான்.இருந்தாலும் எதிரிகளிடம் இருந்து எப்படி பிடிபடாமல் இருப்பது,இங்கு இருந்து எப்படி தப்பி செல்வது என்ற சிந்தனையில் இருந்தான்.

இப்படி அவன் யோசித்துக் கொண்டு இருந்தபோதே  ஒரு சிறிய சிலந்தியை பார்த்தான். உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது தன் வேலையில் இறங்கியது.அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது.

அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டு கொள்ள வில்லை. அது வலை பின்னுவதில்லே குறியாக இருந்தது.

அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க’ என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்து போனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர் பிழைத்தே விட்டான்.

இப்போது அவனுக்குக் காரணம் புரிந்து விட்டது. குகை வாசலில் கூடுகட்டிக் கொண்டு இருந்தது.ஒரு சிலந்தி.
அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்று விட்டார்கள்.

அவன் மனதிற்குள் இப்படி சொல்லிக் கொண்டான்.
ஒரு கல் சுவரைவிட சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்து விட்டேனே.

ஆம்.,நண்பர்களே...!

*நீங்கள் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், மற்றவர்களை கொஞ்சமாவது நம்புங்கள்...

*பிறரை நம்பும் போதுதான் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும், உங்கள் பணிச்சுமையை குறைத்துக் கொள்ளவும் முடியும்.

*பிறரின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறவது கடினம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...