கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: வான் சிறப்பு


குறள் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


பழமொழி :

Quality is more important than quantity.


அளவைவிட தரமே அதிமுக்கியம்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 


2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.


பொன்மொழி :


ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா


பொது அறிவு :


1. இந்தியாவில் விமான தொழிற்சாலை எங்கு உள்ளது? 


பெங்களூரில் உள்ளது.


 2.இந்தியாவில் தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


உத்திரபிரதேசம்.


ஆரோக்ய வாழ்வு :


கேரட் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், ஒருவேளை கேரட் சாப்பிடுவது உங்கள் தினசரி ஊட்டச்சத்து மதிப்பில் 184% வழங்குகிறது. U.S. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், பெரியவர்கள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 900 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ பரிந்துரைக்கிறது. ஒரு முழு பச்சைக் கேரட்டில் FDA பரிந்துரையைப் பூர்த்தி செய்ய போதுமான வைட்டமின் A உள்ளது.


NMMS Q 74 :


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5, 4, 9, 13, 22, _________ 


விடை : 35. விளக்கம்: 5+4 = 9; 4+9 = 13; 9+ 13 = 22; 13 + 22= 35;


நீதிக்கதை


சொந்த இடம்


அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 


ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 


அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 


ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 


அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 


அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 


அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 


ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.


இன்றைய செய்திகள்


13.10.22


* மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைகிறது ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ - தமிழக அரசு அறிவிக்கை.


* தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


* மாதவரத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்காக சுரங்க கட்டுமானப் பணிகள் தீவிரம்: 52 அடி ஆழம், 492 அடி நீளத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது.


* ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு.


* பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.


* சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.


* தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.


* தேசிய விளையாட்டில் டிரையத்லான் அணிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.


* செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வந்த தேசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.



Today's Headlines


* The Madras High Court has ordered the Tamil Nadu government to respond in a case seeking to provide free laptops to differently-abled students.


*  'Kadavur Devangu Sanctuary' to be India's first Devangu Sanctuary - Tamil Nadu Govt.


*  MBBS graduates can apply for 1,021 Assistant Doctor vacancies in government hospitals in Tamil Nadu, Medical Staff Selection Board has announced.


 * The intensity of tunnel construction work for metro rail operation at Madhavaram: 52 feet deep, 492 feet long railway station.


 * Diwali Bonus for Railway Employees: Central Government Notification


*  A spaceship sent by NASA has successfully deflected an asteroid that was coming to hit the Earth and created a historic record.


 * India overturned China's resolution at the International Atomic Energy Agency - Union External Affairs Minister Jaishankar Information.


*  A Chennai school girl won 3 bronze medals in the national gymnastics competition.


*  Tamil Nadu won gold in the triathlon team category in the national games.


* The national sports competition which started on September 29 in Gujarat ended yesterday.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...