கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022(Allotting the post of Record Clerk to Block Education Offices - Revised Proceedings of the Tamil Nadu Commissioner of School Education)...



>>> வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022(Allotting the post of Record Clerk to Block Education Offices - Revised Proceedings of the Tamil Nadu Commissioner of School Education)...


 தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6.

ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022


பொருள்‌: பள்ளிக்‌ கல்வித்‌ துறை - நிருவாக சீரமைப்பு - அலுவலகப்‌ பணியாளர்கள்‌ பணிநிரவல்‌ செய்து ஆணை வழங்கப்பட்டது - வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வழங்குதல்‌ - சார்ந்து.

பார்வை: 1. அரசு ஆணை (நிலை) எண்‌.151, பள்ளிக்‌ கல்வி(பக1(1)த்‌துறை, நாள்‌ 09.09.2022.

2. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள் ந.க.எண்‌.45227/அ1/இ1/2022, நாள்‌ 17.09.2022.


பார்வை 1-ல்‌ காணும்‌ அரசாணையினை செயல்படுத்தும்‌ விதமாக பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ அனுமதிக்கப்பட்ட பல்வேறு அலுவலக பணியாளர்கள்‌ பணியிடங்கள்‌ பணிநிரவல்‌ செய்து பார்வை 2-ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ ஆணை பிறப்பிக்கப்பட்டது.


மேற்காணும்‌ செயல்முறைகளில்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, தற்போது வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு இணைப்பில்‌ உள்ளவாறு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ (Record Clerk) ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.


பார்வை 2-ல்‌ கண்டுள்ள செயல்முறைகள்‌, மற்றும்‌ தற்போது அளிக்கப்பட்டுள்ள மேற்கண்ட திருத்திய ஆணையின்படி, தங்கள்‌ மாவட்டத்தில்‌ பதிவறை எழுத்தர்‌ பணியிடத்தினை (Record Clerk) பணிநிரவல்‌ செய்ய தொடர்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும் ‌கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

பள்ளிக்‌ கல்வி ஆணையருக்காக

இணைப்பு : 

பதிவறை எழுத்தர்‌ ஒதுக்கீடு பட்டியல்‌


பெறுநர்‌ 

அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌.


நகல்‌


1. தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-6.


2. இவ்வியக்கக "அ5" பிரிவு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...