கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: விருந்தோம்பல்


குறள் : 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.


பொருள்:

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தக் கூடியவனாக இருப்பான்.


பழமொழி :

When all men speak, no man hears.

அனைவரும் பேசினால், கேட்பது யார்?


இரண்டொழுக்க பண்புகள் :


1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.


 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"


பொன்மொழி :


"பிரச்சனையை நாம் பார்க்கும் விதமே பிரச்சனையாகும். --ஸ்டீபன் கோவி"


பொது அறிவு :


1.கஜிரங்கா விலங்குகள் சரணாலயம் எங்கு உள்ளது?


 அஸ்ஸாம். 


 2. கண்தானத்திற்கான வங்கி எப்போது தொடங்கப்பட்டது ?


 1944 ல்.


English words & meanings :


daze -stunned, making others feel like stunned. noun and verb.பிரமிக்க வைத்தல். பெயர்ச் சொல் ஆகவும் வினைச் சொல் ஆகவும் இருக்கும். days - plural of day. நாட்கள். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலையில் அமினோ - அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக வேர்க்கடலையில் உள்ள டிரைபோட்டஃபன் என்னும் ரசாயனத்தை மூளையில் உற்பத்தி செய்ய உதவி, மனஅழுத்தம், மனச் சோர்வு ஆகியவற்றைக் குறைக்கச் செய்கிறது.


தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் மனநிலை மேம்படும்.


NMMS Q


TROPHY' என்பது 'SPORTS' எனில் 'DEGREE' என்பது ___________. 


 விடை: EDUCATION.

 

நீதிக்கதை


சாகாத வரம்


வையாபுரி பட்டினம் என்ற நகரத்தில் முத்து வியாபாரி மாணிக்கம் என்பவர் வாழ்ந்து வந்தார். மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் இருக்கும். 


மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்தான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டனர். 


மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று நினைத்து, சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் இறந்துவிட்டார். 


ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டு அண்ணன் முத்துவை கொல்ல நினைத்தனர். ஒரு நாள் முத்து வெளிநாட்டிலிருந்து வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். 


முத்து சரி என்றான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கும் போது தம்பிகள் அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான். 


என்ன நடந்தது? என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று வரமளித்தார் கடவுள். 


முத்து வீட்டிற்கு வந்தான். ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். என்ன நடந்தது என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தைப் பற்றி கூறினான். 


தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டு ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். 


அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தபோது, அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். உங்களுக்கு என்ன நடந்தது? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப்போட்டதாக கூறினர். 


கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும் என்றான் ரத்தினம். நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும் என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 ஆண்டு என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். 


கடவுள் பார்த்து நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம் என்றார் கடவுள். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் இருவரும். 


கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும் என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர். 


இருவரும் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நீரில் மூழ்கி இருந்தனர். கடவுள் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமையம் ரத்தினமும், வைரமும் பிணமாக நீரில் மிதந்தனர். 


நீதி :

பேராசை உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை அடைவார்கள்.


இன்றைய செய்திகள்


14.12.22


* மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


* நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


* எலி மருந்துக்கு நிரந்தர தடை; 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை: தமிழக அரசு உத்தரவு.


* டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.


* அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழகத்திற்கு இதுவரை ரூ.11,260 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்.


* கருடா கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க இந்திய விமானப் படை முடிவு.


* இந்திய - சீன எல்லையில் தற்போது நிலைமை சீராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.


Today's Headlines


* The release of water from Mettur dam for delta irrigation has been increased to 21,000 cubic feet per second.


*  No time limit for registration of court judgments in sub-registrar's offices: High Court orders.


 * Permanent Ban on Rat Medicine;  60 days ban on 6 pesticides: Tamil Nadu government order.


 * Minister Duraimurugan participated on behalf of Tamil Nadu in the national level consultation meeting on river connectivity held in Delhi yesterday.


* Housing for all scheme: Rs 11,260 crore allocated to Tamil Nadu so far: Central Govt.


 * Indian Air Force decides to induct women officers into Garuda Commando Force.


 * China has said that the situation on the India-China border is now stable.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...