கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2022 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


"பால் :அறத்துப்பால். 


இயல் : இல்லறவியல். 


அதிகாரம் : விருந்தோம்பல்.


 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.


 விளக்கம்:

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்."


பழமொழி :

"The resolved mind has no cares. 


 துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டுமே."


இரண்டொழுக்க பண்புகள் :


1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.




 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"


பொன்மொழி :


"தீர்வில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினையில் அல்ல. 


--ஜிம் ரோன்"


பொது அறிவு :


1.நமது உடலில் மிகப்பெரிய உள்உறுப்பு எது? 


 கணையம். 


 2. செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால் வரும் நோய் எது? 


 பெப்டிக் அல்சர்.


English words & meanings :


discrete - individually seperate. adjective. வெவ்வேறான. பெயரடை. Discreet-careful and prudent. adjective. புத்தி கூர்மை உள்ள. பெயரடை


ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வயதான தோற்றம் ஏற்படுத்துவதை தடுக்கிறது. சரும சுருக்கங்களை நீக்கும்.


பொதுவாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன்மூலம் பயோடின் உற்பத்தி அதிகரிக்கும். பயோடின் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.


NMMS Q 


1) 1, 4, 27, 16, 125, ____     


 ans 343                                        


2) 0.5, 0.55, 0.65, 0.8,  ___      


 ans 1



டிசம்பர் 16


வெற்றி நாள்


வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.


1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.


நீதிக்கதை


பத்தாவது பாஸ்


ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான். 


ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். 


அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். 


ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. 


என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். 


ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர். 


ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். 


இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். 


நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான். 


ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று சொல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர். 


இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 


நீதி :

பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.


இன்றைய செய்திகள்


16.12.22


* தமிழகத்தில் கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் ஆக நிதி அதிகாரம் உயர்வு.


* அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்.


* தமிழகத்தில் இவ்வாண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் தகவல்.


* பவானிசாகரில் இருந்து 6,500 கனஅடி நீர் திறப்பு: கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்.


* இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் திரும்பி சென்றது - இந்திய கப்பற்படை தீவிர கண்காணிப்பு.


* நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டம்.


* அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


* பெண்கள் நேசன்ஸ் ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.


* உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்.



Today's Headlines



* In Tamil Nadu, the financial authority has been increased to Rs.5 lakh, Rs.25 lakh and Rs.50 lakh for village, district and district panchayats respectively.


*  192 government college professors got voluntary transfer- information by Higher Education Department..


* Action to purchase 58 lakh metric tons of paddy in Tamil Nadu this year: Food Minister informed.


 * 6,500 cubic feet water release from Bhavanisagar: Vigilance intensified in coastal areas.


* Chinese spy ship returns from Indian Ocean - Indian Navy Keeps watching vigilantly. 


 * Central government plans to start 20 new nuclear power plants in the country by 2031.


 * Following the success of the resolution brought by the United States, it has been announced that Iran will be removed from the UN Women's Organization.


* Women's Nations Hockey: India beats South Africa


 * World Cup Football Final: France vs Argentina.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns