கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான (TET Paper 2) தேதி மாற்றம் - 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Date Change for Teacher Eligibility Test Paper II - Rejection of 30 Candidates' Applications - Teacher Examination Board Notification)...


ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான (TET Paper 2) தேதி மாற்றம் - 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Date Change for Teacher Eligibility Test Paper II - Rejection of 30 Candidates' Applications - Teacher Examination Board Notification)...



சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளுக்கான தேதியை மாற்றம் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தாள்-1 தேர்வு, கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 30 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேரில், 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தாள் இரண்டுக்கான தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


அவர்களுக்கான தேர்வு வருகிற 31ம் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை கணினி வாயிலாக 2 கட்டங்களாக தேர்வு நடத்த இருப்பதாக கூறி அதற்கான அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால்டிக்கெட் 2 கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.


எந்த மாவட்டங்களில் தேர்வு எழுத போகிறார்கள் என்ற விவரத்துடன் முதல் ஹால்டிக்கெட்டும், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மையங்கள் குறித்த விவரத்துடன் மற்றொரு ஹால்டிக்கெட்டும் வெளியிடப்படுகிறது. இதில் முதல் ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கு விண்ணப்பித்தவர்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணித்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தடைவிதிக்கப்பட்ட 9 பேர், தாள்1 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதிய 2 பேர், பெயரை தவறாக பதிவு செய்த 10 பேர் என 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...