தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (BT) மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை - முக்கிய தகவல்கள் (UGTRB Exam Notification for Graduate Teachers and BRTE Vacancies in Tamil Nadu Government Schools and Block Resource Centers - Important Information)...
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%
👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு
(NOC compulsory)
👉மாற்றுத்திறனாளிகள்
👉மூன்றாம் பாலினத்தவர்
👉69% Reservation
என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.
👉 காலிப்பணியிடங்கள் -2222
👉கல்வித்தகுதி -
BED + TNTET PAPER -2 Pass k
👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை
👉தேர்வு - Offline - OMR BASED
👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.
( விவரம் Notifiacation)
👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு
👉பாடவாரியாக தேர்வு உண்டு
👉150 கேள்வி - 150 மதிப்பெண்
👉 OC - 60 Mark தேர்ச்சி
👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி
👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிப்பைப் டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.
மொத்தம் 2222 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 23 பணியிடங்களும், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 16 பணியிடலங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 2171 பணியிடங்களும் காலியாக உள்ளன.
பாட வாரியாகவும் காலிப் பணியிங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 என மொத்தம் 2222 காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 01-11-2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2023
தேர்வு நடைபெறும் நாள்: 07-01-2024
மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்...
>>> Click Here to Download Notification...
>>> Click Here to Download Press Release...
>>> இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் - அரசிதழ் வெளியீடு...
>>> பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...