பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
பொருள்:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையுடன் இருந்து நீதி தவறாது உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
பழமொழி :
Hear more,but talk less.
அதிகம் கேள், குறைவாக பேச
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்.
2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.
பொன்மொழி :
ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
பொது அறிவு :
1. தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது ?
1981 .
2.தேசிய விளையாட்டு தினம் எப்போது?
ஆகஸ்ட் 29.
English words & meanings :
Ant and English. Ant that goes to school - Brilliant
ஆரோக்ய வாழ்வு :
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
இதற்காக பருவ கால ஒவ்வாமை உடைய 16 பெரியவர்களிடம் 4 வாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 200mcg/mL அளவு கொடுத்த போது அதன் அறிகுறிகள் 62.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைக்கவும் பயன்படுகிறது.
NMMS Q
பருத்தித் தாவரங்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் பாக்டீரியா எது?
விடை: பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ்.
பிப்ரவரி 01
கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள்
கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார்.
1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.
ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.
நீதிக்கதை
வளைந்த நாணல்
ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன.
அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!
எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.
நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.
நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.
இன்றைய செய்திகள்
01.02.2023
* ஆதார் எண் - மின் இணைப்பு எண்ணை இணைக்க வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
* ஐஐடி மெட்ராஸில் நடக்கும் ஜி-20 கருத்தரங்கு!
‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த கருத்தரங்கு, ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கவுள்ளது.
* இந்தியாவில் அதிக மாசு அடைந்த ஆறுகள் பட்டியலில் சென்னை கூவம் ஆறு இடம் பெற்றுள்ளது.
* தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளில், வழக்கமாக நடத்தப்பட்டு வரும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது .
* ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
* ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா .
Today's Head lines
* Aadhaar-EB connection linking deadline extended to Feb 15. Earlier the dead line was today.
* Chennai is all set to host the first G20 Education Working Group meeting on February 1 and 2 and as a precursor a seminar on the ‘Role of Digital Technology in Education'. This seminar will explain in detail to the members of G20 countries how to utilise the technology in education.
* In the list of most polluted rivers of India, Chennai's Couvam also listed as most polluted one.
* In Tamil Nadu there are so many famous temples with ancient history. So the activities of all temple should be carried out as a open book. Verdict by Madurai court.
* On February 3rd the memorial day of Anna, as usual there Will be a silent procession.
* As the result of his championship in Australia open tennis Novak Djokovic hold first place again in the ranking list.
* ICC women's T20 Bowler Rankings: Deepti Sharma of India is at No. 2