>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡
நாள் - *வெள்ளிக்கிழமை*
தேதி - *03/02/2023*
நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4:30*
*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*
காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்
*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*
*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*
*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*
*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*
*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*
* பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **
*வருகைப் பதிவு* -
*தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்*
*வரவேற்பு*- தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்
*இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)
*திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*
*கூட்டப் பொருள் மீதான விவாதம்*
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.
*கூட்ட நிறைவு*
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
*அனைத்துவகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு :*
(03-02-2023) இன்று நடைபெறும் *பள்ளி மேலாண்மை குழு(SMC)* கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை *TNSED parents app ல் login* செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்:
1. அதற்கு முன் திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
2. சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தகவல் பெறுதல் வேண்டும்.
3. இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
6. 1372 அரசு பள்ளிகளும் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை(School Development Plan) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.
8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட பள்ளிகளுக்கு பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் *( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் )* தாங்கள் நிதி உதவி கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
10.நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் CSR மூலம் பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி பெற TNSED parent app ல் SDP பதிவேற்றம் செய்வது நமது கடமை.
11.CSR fund நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் வரும் கனரா வங்கியில் SNA அக்கௌன்ட்( HM+SMC தலைவர் கொண்டு ) தொடங்கிட வேண்டும்.
11. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.