கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் ...


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 117

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.


பொருள்:

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது


பழமொழி :

Try and try again you will succeed at last.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 


2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :


அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.


பொது அறிவு :


1. ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் யார்? 


 கியூரி


. 2. உலக அதிசயமான தொங்கும் தோட்டம் எங்கு உள்ளது ? 


 பாபிலோன்.


English words & meanings :


when an ant is looking for a job we call it APPLICANT


ஆரோக்ய வாழ்வு :


தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வரலாம். இது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும்.

தயிர் பச்சடிகளில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.


NMMS Q


ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படும் வினைவேகமாற்றி எது?


 விடை: இரும்பு



 பிப்ரவரி 03


யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்


யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 



என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்



கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 


நீதிக்கதை


என் அடிமைகளுக்கு நீ அடிமை


மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.


அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.


முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.


முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.


அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.


அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.


இன்றைய செய்திகள்


03.02.2023


* ஐ.டி. பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல்துறை: டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.


* கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்: தமிழக மின்வாரியம் கணிப்பு.


* மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.


* வீரர்கள் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்த ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் வெளியிட்டது இந்திய ராணுவம்.


* 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா - ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.


* “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் வாக்குமூலம்.


* 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


* டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.


Today's Headlines


* Tamil Nadu Police pioneered in IT usage proudly said byDGP Shailendra Babu .


* Daily power demand to rise to 19,000 MW in summer: Tamil Nadu Power Board forecast


* Gulf of Mannar, depression approaching Kumarik Sea: Cyclone warning cage number 3 raised at Pampan, Tuticorin.


 * The Indian Army has issued a tender to buy jetpacks, robots and drones for soldiers to attack anywhere.


* Carbon free India by 2070 - Rs.35 thousand crore allocation.


* "Ukrainians were killed and sexually abused during the war," says ex-Russian soldier.


* South Africa won the 3-match ODI series for 2-1.


* TNPL  Cricketers auction: 2 days to be held in Chennai.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...