தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600006.
ந.க.எண். 023879 / ஜெ2 / 2024, நாள். 30.01.2025.
Elementary and Middle Schools - Manarkeni App - Use of Textbook Videos on Smart Boards - Instructing - Regarding - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பொருள் : தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகள் - மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
பார்வை : 1. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 007694/ஜெ2/2023, நாள். 15.04.2024.
2. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 023879/ஜெ2/2024, நாள். 24.12.2024.
3. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், ந.க.எண். 029159/ஜெ3/2023, நாள். 07.01.2025.
4. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 023879/ஜெ2/2023, நாள். 10.01.2025.
பார்வையில் காணும் செயல்முறைகளில் மணற்கேணி செயலியை பயன்படுத்தி
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை புதிய
அறிவியல் நுட்பங்களின் மூலம் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழி காணணாலி காட்சிகள் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் மாணவர்கள்
எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (Smart Board) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திறன் பலகைகளில் சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஒவ்வொருவராக https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Register என்ற பகுதியில் தங்களின் பெயர் அல்லது கைபேசி எண்ணை பதிவு செய்து அதன் பின்னர் Login செய்து உள்நுழைந்து அன்றைய வகுப்பறை சூழலுக்கு ஏற்ற பாடங்களை தெரிவு செய்து கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏற்ற அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள்
மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இணைய முகவரி
https://forms.gle/CNTApRsyHfbUxTdz5
பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்
UDISE No
Enter School UDISE Code - 11 digit
உங்கள் பள்ளியின் 11 இலக்க UDISE குறியீட்டை உள்ளிடுக
EMIS Teacher ID
Enter your EMIS Teacher ID - 8 digit
உங்களின் 8 இலக்க EMIS ஆசிரியர் அடையாளத்தை(ID) உள்ளிடுக
Name
Enter your Name
உங்களின் பெயரை உள்ளிடுக
Is the New Smart board fully Installed and functional in your School?
உங்கள் பள்ளியில் புதிய ஸ்மார்ட் போர்டு முழுமையாக நிறுவப்பட்டு செயல்படுகிறதா?
Yes
No
Other:
Upload Photo
Upload your photo with Manarkeni opened in the Smart board in the background- use the below link
பின்னணியில், ஸ்மார்ட் போர்டில் மணற்கேணி செயலி திறக்கப்பட்டுள்ளவாறு உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்க - கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துக
https://manarkeni.tnschools.gov.in
Teacher and School can login with their Teacher ID or School Login
ஆசிரியர் மற்றும் பள்ளி, அவர்களின் ஆசிரியர் அடையாளம்(ID) அல்லது பள்ளி உள்நுழைவுடன் உள்நுழையலாம்
Teacher can also download the Manarkeni Mobile app on to their mobile phones from the below Google Play Store link
கீழேயுள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் இணைப்பிலிருந்து, ஆசிரியர் மணற்கேணி மொபைல் செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யலாம்
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
Required format
PNG
JPEG
JPG
Upload 1 supported file: image. Max 10 MB.