கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...

 ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...



>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு...







🛑🎤 *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் அறிவிப்புகள்*



📌 *மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.*


📌 *இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.*


📌 *ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.*



📌 *அரசின் நலத்திட்டங்களையும் மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


முதல்வர் அறிவிப்பு


மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது. 



மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.



மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.



உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.



அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.



இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...