கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (Student dies after consuming too many nutritional pills - Two teachers Suspended)...

 



 அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (Student dies after consuming too many nutritional pills - Two teachers Suspended)...


சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி கல்லீரல் பாதிப்புக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நகராட்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியில் கடந்த, 6ஆம் தேதி சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதில் 8ஆம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவிகள் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டனர். இதையடுத்து நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


அங்கு மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 40 மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து இன்று மாணவி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


இந்நிலையில், சேலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.


இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


போட்டி போட்டு மாணவிகள் மாத்திரை சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...