திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court)...



>>> திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court Judgement)...


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராகப் பணியாற்றி இருக்கிறார். 2014-ல் உடல்நலக் குறைவால் இவர் மரணமடைந்திருக்கிறார். தன்னுடைய தாயின் பணியை தனக்கு வழங்கக் கோரி, அவரின் மகள் சரஸ்வதி, அவர் இறந்த ஆண்டே விண்ணப்பித்து இருக்கிறார்.


ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


அதனால், 2017 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அந்தப் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விண்ணப்பித்ததாகக் கூறி, இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


அதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், `சத்துணவுத் திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில் கருணை அடிப்படையில் பணியமர்த்தக் கோரி விண்ணப்பிக்க, எந்தக் கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.


திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்க உரிமையில்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே மனுதாரரின் கல்வித் தகுதிக்கேற்ப, அவருக்கான பணியை அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.


திருமணமான பெண்களும் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.







கருணை அடிப்படையில் மணமான பெண்ணிற்கு வேலை...


திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O. Ms. No - 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை என்ற எண்ணின் கீழ் 21.4.2017 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.


 பெற்றோர்களை பராமரிப்பதாக திருமணமான பெண்கள் உறுதி அளித்தால், அவர்களுக்கு அரசுப் பணியை கருணை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற ஒரு நிபந்தனையை சேர்க்க வேண்டும். அந்த நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பணி நியமனம் பெற்ற பிறகு திருமணமான பெண்கள் தங்களுடைய பெற்றோர்களை பராமரிக்கவில்லை என்று ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என்கிற நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு அரசுப் பணி கருணை அடிப்படையில் வழங்கலாம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்துகிறது.


எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...