கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் : 170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.


பொருள்:

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை


பழமொழி :

The best things comes from hard work.



மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன். 


2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.


பொன்மொழி :


தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.


பொது அறிவு :


1. சே' என்பதன் பொருள் என்ன ?


 எருது. 


 2. ' கயல் 'என்பதன் பொருள் என்ன? 


 மீன்.


English words & meanings :


 nestled – settle or lie comfortably, in a half hidden place. The baby nestled in her mother's arm. verb. அணைப்பாக இருத்தல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


ஸ்பின்னாச், பீட்ரூட், பூசணிக்காய், காளான், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கின்றன.


உங்களுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும் காய்கறிகளில் இருந்து பெற முடியும்.


கணினி யுகம்


Home - Takes the user to the start of the current line. Ctrl + Home - Go to the beginning of the document


நீதிக்கதை


ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான். 


ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான். 


ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. 


ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. 


அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன். 


நீதி :



எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக்கூடாது


இன்றைய செய்திகள்


05.04. 2023


* நிலக்கரி ஏல ஒப்பந்த அறிவிப்பில் டெல்டா பகுதிகளை நீக்குக: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.


* தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


* தமிழகத்தில்  இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்.


* சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது.


* மீண்டும் அத்துமீறல்: அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கான அறிவிப்பை சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


* நாடு முழுவதும் வசிக்கும் 66.9 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை (Personal Data) விற்பனைக்கு வைத்தது தொடர்பாக 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு ஹைதராபாத் போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


* நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய இருப்பதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.


* நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை நாசா அறிவித்துள்ளது.


* ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்.


* டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.


Today's Headlines


* Delete delta areas in coal auction deal notification: CM Stalin's letter to PM Modi


 * It has been confirmed that 91 percent of the corona infected people in Tamil Nadu have XBB infection.


* Chennai Meteorological Center Director informed that rain with thunder and lightning is likely in Tamil Nadu.


 * Southern Railway has started the operation of Vande Bharat train between Chennai and Madurai.


 * Violation again: Chinese Ministry of Home Affairs has issued a notice to change the names of 11 places in Arunachal Pradesh.


 * Hyderabad police have sent notices to 11 companies including 3 banks for selling personal data of 66.9 crore people living across the country.


*  Finland will join NATO as the 31st country, NATO Secretary General Jens Stoltenberg has said.


* NASA has announced the team of astronauts for the Artemis 2 mission to send humans to the moon.


 * Athletics competition for Railway Guards - Chennai begins today.


 * Novak Djokovic of Serbia has once again topped the tennis rankings.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...