கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண் : 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்

திறனறிந் தாங்கே திரு


பொருள்:

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.


பழமொழி :

A journey of a thousand miles begins with a single step


ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது



இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 


2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.


பொன்மொழி :


வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் சிரிப்புக்களை தூவுங்கள்


பொது அறிவு :


1. கண் தானத்திற்கான வங்கி எப்போது தொடங்கப்பட்டது?


 1944இல். 


 2. மரவட்டைக்கு எத்தனை கண்கள் உள்ளன?


 ஏழு.


English words & meanings :


 resolute - firm in their belief. உறுதியான கொள்கையுடைய. வினைச் சொல்.


ஆரோக்ய வாழ்வு :


வைட்டமின் C நிறைந்துள்ள ஒரு சுவையான பழம் ஆரஞ்சு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. ஆரஞ்சுகளில் வைட்டமின் A நிறைந்த காரோடினாய்ட் உள்ளது. இந்த வைட்டமின் கண்களில் உள்ள ம்யூகஸ் சவ்வு ஆரோக்யமாக இருக்க உதவுகிறது. வயது சம்பந்தப்பட்ட கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.


கணினி யுகம்


Ctrl + Esc : Open Start. Ctrl + Shift + Esc : Open Task Manager.


ஏப்ரல் 20



அடால்ஃப் ஹிட்லர் அவர்களின் பிறந்தநாள்


அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த இவருடைய சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை சுனாமியாகச் சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். தன்னை வெல்ல யாரும் இல்லை இறுமாப்பில் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்குப் பாதை ஏற்படுத்திக்கொடுத்தார். 20-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ரத்த சரித்திரம், 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. 


நீதிக்கதை


கதை :


ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 


முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 


அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 


இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :


எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.



இன்றைய செய்திகள்


20.04. 2023


* கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அரசு தனித் தீர்மானம்.


* ராணுவத்தில் ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு தொடங்கி உள்ளது.


* தமிழகத்தில் 12 நகரங்களில்  வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.


* மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


* சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


* மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி.


* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.


Today's Headlines


* Reservation of seats for Adi Dravidians who have converted to Christianity: Govt separate resolution in Assembly.


 * Online Common Entrance Test for Army Recruitment has started.


 * 12 cities in Tamil Nadu recorded temperatures crossing 100 degrees Fahrenheit.


 * Union Health Minister Mansukh Mandaviya said that the G20 representatives appreciated the People's Pharmacy.


 * ISRO's NSIL (Newspace India Limited) has entered into an MoU to launch Telios-2 Earth observation satellite belonging to Singapore.


* According to the United Nations, India will overtake China as the most populous country this year.


 * Champions League Football: Real Madrid qualify for the semi-finals.


* World Test Championship final: Cummins-led Australia squad announced

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...