குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் - 2023 - 2024...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் - 2023 - 2024...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை ரிஷப ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சுக ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

சத்ரு ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் தன் வசப்படுத்தி கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே!!

குரு போக ஸ்தானத்தில் நிற்பதால் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். முன்கோபத்தினால் சிறு சிறு வாய்ப்புகளையும் தவறவிடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு கிடைக்கும் சிறு சிறு காரியங்களில் மகிழ்ச்சி அடைவது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். மனநிலையில் திடீர் மாற்றங்கள் பிறக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.

பலன்கள்:


குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். 


குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வழக்குகளில் சமரசத் தீர்வு கிடைக்கும். தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை பற்றிய விமர்சன கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நினைத்த சில பணிகள் தாமதத்திற்கு பின் நிறைவேறும்.


குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். தந்தையின் உடல்நிலையில் கவனம் வேண்டும். சொத்துக்களை வாங்கும் பொழுது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை தீர விசாரித்த பின்பு வாங்கவும். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.

பொருளாதாரம்:


வரவுக்கு ஏற்ற செலவுகளால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். எடுக்கும் சில முயற்சிகளில் விரயங்களுக்கு பின்பு நற்பலன்கள் ஏற்படும். புதிய பொருட்களின் சேர்க்கையினால் கையிருப்புகள் குறையும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். மருத்துவ செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

பெண்களுக்கு:


பெண்களுக்கு இறை வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். நெருக்கமானவரிடம் கொடுக்கல், வாங்கலை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும். கல்வியில் கவனத்துடன் இருப்பது நல்ல மதிப்பெண் பெற வழிவகுக்கும். ஞாபக மறதி மற்றும் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்பாலின நண்பர்களிடத்தில் கவனம் வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான அலட்சியங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கைமாறாக கொடுத்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எளிதில் முடிக்க வேண்டிய சில பணிகள் கூட தாமதமாக முடிப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு:


தொழிலில் போட்டிகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் ஓரளவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சொந்த ஊர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். கமிஷன் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் பிறக்கும். கூட்டாளிகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்படும்.

கலைஞர்களுக்கு:


கலைத்துறையில் எதிர்பாராத புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளால் சில நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பாராத சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகளால் குழப்பங்கள் உண்டாகும்.

நன்மைகள்:


போக குருவினால் கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கவனம்:


போக குருவினால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

வழிபாடு:


பௌர்ணமி தோறும் குலதெய்வ வழிபாடு செய்து வர இன்னல்கள் குறையும்.


ஆதரவற்ற சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவது மனநிம்மதியை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...