கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருபெயர்ச்சி பலன்கள் - மிதுனம்...

 



குருபெயர்ச்சி பலன்கள் - மிதுனம்



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மிதுன ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சகோதர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

புத்திர ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கலகலப்பு நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!!

குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தடைபட்டு வந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் ஆதரவானவர்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை மேம்படும்.


குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதாரம்:


வருமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வணிகத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சேமிப்பை பயன்படுத்துங்கள்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மருத்துவம் தொடர்பான விரயங்கள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

பெண்களுக்கு:


பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நுணுக்கமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விளையாட்டு மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் மன நிம்மதியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:


வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் நவீன கருவிகளை பயன்படுத்தி நன்மை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பலதுறை சம்பந்தப்பட்ட புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகளின் மூலம் ஆதாயமும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள். கட்சி தொடர்பாக எதிர்பாராத சில விரயங்கள் இருந்தாலும், அனுகூலம் உண்டாகும். கௌரவமான சில பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நன்மைகள்:


லாப குருவினால் நல்ல முன்னேற்றமும், சிந்தனைகளில் தெளிவும் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கவனம்:


லாப குருவினால் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.

வழிபாடு:


ஜென்ம நட்சத்திரத்தன்று திருச்செந்தூரில் உள்ள தமிழ் கடவுள் முருகரை வழிபாடு செய்து வர மேன்மை ஏற்படும்.


பசு மாட்டிற்கு தீவனம் மற்றும் தட்டு கொடுத்து உதவுவதன் மூலம் செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Procedure to Apply for Leave through Kalanjiyam Mobile App

  KALANJIYAM - APPLY LEAVE ♻️ 01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் ▪️CL ▪️RL ▪️EL ▪️ML போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக ...