கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மகர ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.



குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

தொழில் ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

போக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே!!

குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகளை சரியான முறையில் முதலீடுகள் செய்வது சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அரசு சார்ந்த செயல்களில் தாமதம் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். தூரத்து உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். மற்றவர்களை சரியான முறையில் பயன்படுத்தி ஆதாயத்தை உருவாக்குவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மருத்துவ படிப்பில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும்.


குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை நம்பி செயல்களில் இறங்குவதை குறைத்துக் கொள்ளவும். இனம்புரியாத சில கவலைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

பொருளாதாரம்:


வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் வாழ்க்கை தரம் உயரும். எதிர்பாராத சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்த தேக்க நிலை குறையும். வாகன காப்பீடுகளை புதுப்பித்து கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம்:


தாயின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அவ்வப்போது தசை பிடிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.

பெண்களுக்கு:


பெண்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். செயல்களில் வேகத்தை விட விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அர்த்தமில்லாத பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சில இடங்களில் உங்களை பற்றி தவறான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நன்று. ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்ற முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் சில மறைமுகமான போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான குடும்ப பிரிவினைகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு:


வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சிலர் ஒதுங்கி செல்வார்கள். புதுமையான சில யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வியாபார ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த நெருக்கடிகள் சிலருக்கு குறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

கலைஞர்களுக்கு:


கலைத் துறையினருக்கு மத்திமமான வரவு உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விவாதங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி முன்னேற்றத்தினை உருவாக்கி கொள்வீர்கள். அரசு சார்ந்த ஒப்பந்தங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆடம்பரமான கற்பனைகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பார்த்த சில பதவிகள் சாதகமாக அமையும்.

நன்மைகள்:


சுக ஸ்தான குருவினால் நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கும், செல்வாக்கினை மேம்படுத்தி கொள்வதற்கும் சூழல் ஏற்படும்.

கவனம்:


சுக ஸ்தான குருவினால் சிந்தனையின் போக்கில் கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லவும்.

வழிபாடு:


செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீ பிரத்யங்கரா தேவியை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.


துப்புரவு பணியாளருக்கு உதவி செய்வதன் மூலம் மனதில் இருந்துவந்த சோர்வு விலகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...