கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி...

 



குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கன்னி ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

போக ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

குடும்ப ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சுக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கனிவும், கனவுகளும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!

குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் தூரத்து உறவினர்களிடம் ஆதரவான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த செயல்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சிந்தனைகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடுகளும், விரயங்களும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவருவாய் மற்றும் பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியும் பிறக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும்.

பொருளாதாரம்:


கடன் சார்ந்த நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். வாக்கு சாதுரியத்தின் மூலம் வரவுகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்:


ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத திடீர் மருத்துவ செலவுகளால் சேமிப்பு குறையும்.

பெண்களுக்கு:


பெண்களுக்கு குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அவ்வப்போது மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விருப்பமான சில துறைகள் கிடைக்க படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகஸ்தர்களுக்கு அரசு பணிகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :


வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். நறுமணப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். 

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான உதவிகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு:


சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நிதானமாக செயல்படவும். கட்சி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது இருந்த சிறு சிறு வதந்திகள் மறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.

நன்மைகள்:


அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சுதந்திரத்தன்மையுடனும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாற்றமான சிந்தனைகளுடனும் செயல்படுவீர்கள்.

கவனம்:


அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆர்வமின்மையும், எண்ணிய சில பணிகள் நடைபெறுவதில் தாமதமும், புதிய அனுபவமும் பிறக்கும்.

வழிபாடு:


வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.


பாதுகாப்பு வீரர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவதன் மூலம் சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். 

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...