கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்...




குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை துலாம் ராசிக்கு ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

லாப ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

ராசி ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சகோதர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

அனைவரையும் சமமாக கருதும் துலாம் ராசி அன்பர்களே!!

குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் ஏற்படும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவரவு மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


குரு ஏழாம் பார்வையாக ஜென்ம ராசியை பார்ப்பதால் குணநலன்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனை விருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாகன பயணங்களின் மூலம் திருப்திகரமான சூழல் அமையும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில திடீர் வாய்ப்புகளால் வரவுகள் மேம்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் மேம்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப சேமிப்புகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முழங்கால் மற்றும் காது தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

பெண்களுக்கு:


மனதில் எண்ணியவை நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். தகவல் தொடர்புத் துறை சார்ந்த கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உபரி வருமானத்திற்கான எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு:


தொழில் நிமிர்த்தமான புதிய முதலீடுகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வாசனை திரவியம் சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கட்டுமான பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பங்குச்சந்தை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்துக்களின் மூலம் பலரின் மனதினை வெற்றி கொள்வீர்கள். பின்னணி இசை மற்றும் குரல் சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். தற்காப்பு கலைகள் மீதான ஈடுபாடுகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


கட்சி நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், ஆதரவும் மேம்படும். புதிய முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல் உண்டாகும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும்.

நன்மைகள்:


களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதுவிதமான எண்ணங்களும், எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

கவனம்:


களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதும், புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்வதும் மேன்மையை உருவாக்கும்.

வழிபாடு:


திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்கி வர வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.


ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும், கலை சார்ந்த துறைகளில் உள்ள மூத்த கலைஞர்களுக்கும் உதவுவதன் மூலம் மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். 

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...