கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - "தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்" (A Misunderstood Tamil Proverb - "If the mother jumps eight feet, the child jumps sixteen feet")...



 தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - "தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்" (A Misunderstood Tamil Proverb - "If the mother jumps eight feet, the child jumps sixteen feet")...

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


இன்றைய பழமொழி...


🥀🌾🥀🌾🥀🌾🥀🌾


"தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்".


*விளக்கம்:


இது மனிதனுக்கோ அல்லது விலங்கினங்களுக்கோ கூறப்பட்ட பழமொழி அல்ல. மாறாக இது ஒரு விவசாய பழமொழி.


*"வாழை"   தார் தள்ளி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முன்பாகவே தன்னுடைய குலம் தழைத்தோங்கும் வகையில் தன்னைச் சுற்றி தன்னுடைய வருங்கால சந்ததியினரை உருவாக்கிச் செல்வதால் வாழையை தாய் என்றனர்.தென்னையை பிள்ளை என்றனர். "பெற்ற பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்," "பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையை நட்டால் இளநீரு" என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.


*நெல்லுக்கு நண்டோட

*கரும்புக்கு நரியோட

*வாழைக்கு வண்டியோட

*தென்னைக்கு தேரோட


என தாவரங்கள் நடும் போது இரு தாவரங்களுக்கான இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர்.



*அதாவது இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு தாராளமாகச் செல்ல வேண்டும். இரண்டு கரும்புகளுக்கு இடையே ஒரு நரி தாராளமாகச் செல்ல வேண்டும். இரண்டு வாழைக்கன்றுகளை நடும் போது ஒரு மாட்டு வண்டியோடும் அளவிற்கு அதாவது எட்டடி அளவிற்கு இடைவெளி வேண்டும். இரு தென்னம்பிள்ளைகளுக்கு இடையில் ஒரு தேரோடும் அளவிற்கு இடைவெளி வேண்டும். அதாவது பதினாறு அடி இடைவெளி இருக்க வேண்டும்.



*தாயானது (வாழையானது) தன்னுடைய வேர்களை எட்டடி அளவிற்கு  பாய்ச்சக் கூடியது. பிள்ளையானது (தென்னை) பதினாறு அடி தூரத்திற்கு  வேர்களை பாய்ச்சி மண்ணில் உள்ள சத்துக்களை உறிஞ்சக்கூடியது என்பதை விளக்கவே தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்றார்கள்.


*இப்பொழுது நாம் தாய்ப் புலி எட்டடி பாய்ந்தால் குட்டிப்புலி பதினாறு அடி பாயும் என்பதை மனதில் கொண்டு அதை மனிதனுக்கு உதாரணமாக பயன்படுத்துகிறோம்.


*தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளில் இதுவும் ஒன்று.

                 நன்றி

  

🌴🌴🌴🌴🌴🌴🌴






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...