கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கான முன்னுரிமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு (Supreme Court directs Tamil Nadu Government on promotion priority issue)...


 பதவி உயர்வுக்கான முன்னுரிமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு (Supreme Court directs Tamil Nadu Government on promotion priority issue)...



தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் இருக்கும் 54 துறையிலும், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு உறுதி செய்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


எனவே, 2023 மார்ச் 10ல் இருந்து தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


முந்தைய செய்தி

பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாதற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்தது.


தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு விவகாரத்தில் உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு வழங்கி வந்த நிலையில், அதனை ரத்து செய்த உச்சநீதிமன்றம் மதிப்பெண்கள் மற்றும் வயது மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்போதைய தலைமைச் செயலாளர்கள், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


2019ம் ஆண்டு முதல் பல மேல்முறையீடுகளிலும் உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்த போதும்கூட, அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக்கூறிய பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில், இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மேற்கொண்டுள்ளனர் எனக்கூறப்பட்டது. அதிகாரிகள் தவறுகள் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய நாள் அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



அப்போதைய தலைமை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், முன்னாள் பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட 9 அதிகாரிகள் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலமாக ஆஜராகினர்..


நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்ததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலை தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோல் தவறுகள் நடக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மேலும் பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...