கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரு புத்தகம் என்ன செய்யும்...? (What does a book do...?)



ஒரு புத்தகம் என்ன செய்யும்...? (What does a book do...?)


 

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.


2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.


3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.


4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.


5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.


6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.


7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.


8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.


9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.


10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது வரலாற்றுக்கும், புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.


11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.


12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காக்கை, குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.


13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.


14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.


15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.


16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.


17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.


18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.


19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...