முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...

 


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.


தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும். 


மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும். 


தேவையான ஆவணங்கள்


* விண்ணப்பதாரரின் புகைப்படம்


* குடும்ப அட்டை


* ஆதார் அட்டை 


* 12ஆம் வகுப்பு சான்றிதழ்


* கல்லூரி விண்ணப்பம் 


* தந்தை கல்வி சான்றிதழ்


* தாய் கல்வி சான்றிதழ்


* சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ்



விண்ணப்பிப்பது எப்படி?


*STEP : 1


முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும்.


ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும். Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து Login செய்யவும்


Account இல்லாதவர்கள் புதிதாக Account Open செய்யவும். அதில் new user? sign up என்ற Optionல் புதிதாக Account Open செய்யலாம். 


Account Open செய்து லாகின் செய்து அதில்  Revenue Department என்பதை  செய்யவும். 


முதல் பட்டதாரி  என்பதை தேர்வு செய்து Proceed என்பதை Click செய்யவும்.


*STEP : 2


அடுத்து அதில்  Register CAN என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து அவரும் விண்ணப்பப் படிவத்தில்  விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு  வரும்  OTP எண்னை கொடுத்து Register என்பதை Click செய்யுங்கள்


அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வரும். அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 


*STEP : 3


அதில் Current Course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை டைப் செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து Submit கொடுக்கவும்.


*STEP : 4


அடுத்து உங்களுடைய ஆவணங்களை Upload செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Upload செய்யுங்கள்.


அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து SIGN இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்.


 Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்


*STEP : 5


ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். 


அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள்  ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.


பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும்.  உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை  கொண்டு உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் டவுன்லோடு செய்யலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...