பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024 - 6 வகையான போட்டிகள் நடைபெறுதல் - செய்தி வெளியீடு (Porunai Nellai Book Festival 2024 - 6 Kinds of Competitions - Press Release)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024 - 6 வகையான போட்டிகள் நடைபெறுதல் - செய்தி வெளியீடு (Porunai Nellai Book Festival 2024 - 6 Kinds of Competitions - Press Release)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
திருச்சி புத்தகத் திருவிழா 2023-2024 அழைப்பிதழ் - நவம்பர் 23 முதல் டிசம்பர் 04 வரை - நாள்வாரியான நிகழ்ச்சி நிரல் (Trichy Book Festival 2023-2024 Invitation – November 23 to December 04 – Day by Day Agenda)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நீலகிரி புத்தகத் திருவிழா 2023-2024 அழைப்பிதழ் - அக்டோபர் 20 முதல் 29 வரை - நாள்வாரியான நிகழ்ச்சி நிரல் (Nilgiri Book Festival 2023-2024 Invitation – October 20 to 29 – Day by Day Agenda)...
ஒரு புத்தகம் என்ன செய்யும்...? (What does a book do...?)
1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.
8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது வரலாற்றுக்கும், புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காக்கை, குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்!
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...