கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...

 

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏. 


ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

   1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.


கட்டகம்  - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.


ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.


அதை நகல் எடுத்துக்கொண்டு  ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

                        நன்றி.

                                              SCERT


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள இடைக்கால தடை ஆணை

    Interim Stay order of the Madras High Court regarding 5400 Grade Pay 5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள, சென்னை உயர்நீதிமன்றத்தின் இட...