கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...



>>> பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...


இன்று முதல் அமலுக்கு வந்த பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு.. முழு விவரம் இதோ..!!👉


பத்திரப் பதிவுக் கட்டணம்..!!


📑 பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பதிவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


📑 புதிதாக அமலுக்கு வந்த பதிவுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!!


பதிவுக் கட்டணம்:


📑 தமிழ்நாட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


📑 இந்த பத்திரப் பதிவுகளுக்கு பதிவுக் கட்டணம் 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


📑 அதாவது, பதிவுச்சட்டம் 1908ன் பிரிவு 78இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.


📑 அந்த வகையில் ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும்,


📑 குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்,


📑 அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும்,


📑 தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


📑 மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10,000 என்பதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1%எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...