கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :225


ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.


விளக்கம்:


பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


பழமொழி :

All that glitters is not gold


மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.


 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 


பொது அறிவு :


1. ஹரியானா சூறாவளி’ என்று அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் யார்?


விடை: கபில் தேவ்


2. மேன் புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: அருந்ததி ராய்


English words & meanings :


fe·lic·i·ta·tion - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :


சீரகம் -வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. 


ஜூலை 27


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்


ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.


நீதிக்கதை 


ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.


பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.


மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.


எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.


பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.


வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.



அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.


இன்றைய செய்திகள்


27.07. 2023


*லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு.


*விடிய விடிய பலத்த மழை - டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.


*சோழன் விரைவு ரயில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நேரம் மாற்றம்.


*கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தனித்தீவாக மாறிய உடுமலை வனப்பகுதி.


*ஜப்பான் ஓபன் பேட்மிட்டன்: முதல் சுற்றில் திரில் வெற்றி பெற்ற லக்ஷயாசென்.


*4 ஓவர்...8 ரன்...7 விக்கெட் ....சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மலேசிய வீரர் சையார்சுல் இசாட்.


Today's Headlines


*First women police station inaugurated in Kargil, Ladakh.


 *Heavy rain at dawn - Orange alert for Delhi: Flooding on roads.


 *Cholan Express train timing change from 14th August.


 * Udumalai forest area which has become a separate island due to increase in water flow in the river.


 *Japan Open Badminton: Lakshyasen wins first round.


 *4 overs...8 runs...7 wickets...Malaysian player Sayarsul Izad has set a new record in international T20 cricket.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...