கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)...

 கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)...


மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது


ஓசூர்: ஓசூரில், மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர், 30 வயது தொழிலாளி, முதல் கணவரை பிரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.


அந்த பெண்ணுக்கு, 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஏழாவது படிக்கும், 12 வயதான மகள் வயிறு வலிப்பதாக கூறவே, மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றார்.


அப்போது, மூன்று மாத கர்ப்பம் அடைந்திருந்த அந்த சிறுமியின் வயிற்றில் இரட்டை கரு இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய், ஓசூர் மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், தந்தையை கைது செய்தனர்.


அவரிடம் விசாரித்த போது, அந்த சிறுமியை தன்னால் மகளாக பார்க்க முடியவில்லை என்று கூறியதாக, போலீசார் கூறினர்.


எனினும், சிறுமியிடம் அத்துமீறிய அந்த தந்தையை கண்டித்த போலீசார், அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


ஆசிரியரை கைகாட்டிய சிறுமி

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் முதலில் விசாரித்த போது, தந்தையை காட்டிக் கொடுக்க அவர் விரும்பவில்லை. மாறாக, தனக்கு பிடிக்காத பள்ளி ஆசிரியர் ஒருவர்தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றார். அந்த அப்பாவி ஆசிரியரிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுமியுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லாதது தெரிந்தது. அதன்பின், அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, பக்கத்து வீட்டு இளைஞனை கை காட்டினார். அவரிடமும் விசாரித்த போது, அந்த குற்றத்திற்கு அவர் காரணமில்லை என்பது தெரிந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், தாயின் இரண்டாவது கணவரே, கர்ப்பத்துக்கு காரணம் என்பதை அந்த 'பலே' சிறுமி ஒப்புக்கொண்டார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...