கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


>>> கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021  -  Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு இருந்தாலும், பல இடங்களில் தாயின் சாதியை அடிப்படையாக வைத்து சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுத்து வருவதாக தொடர் புகார் எழுந்த நிலையிலும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததாலும் புதிய அரசாணையை அரசு வெளியிட்ட்டிருக்கிறது.


இதன்படி அனைத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் கலப்பு திருமணம் செய்த பெற்றோர் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக தந்தையின் பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கலப்பு திருமணம் செய்தவர்கள் தாய் சாதியின் அடிப்படையிலும் தங்கள் குழந்தைக்கு சாதி சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு இந்த புதிய அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns