கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Community Certificate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Community Certificate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


>>> கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021  -  Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு இருந்தாலும், பல இடங்களில் தாயின் சாதியை அடிப்படையாக வைத்து சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுத்து வருவதாக தொடர் புகார் எழுந்த நிலையிலும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததாலும் புதிய அரசாணையை அரசு வெளியிட்ட்டிருக்கிறது.


இதன்படி அனைத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் கலப்பு திருமணம் செய்த பெற்றோர் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக தந்தையின் பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கலப்பு திருமணம் செய்தவர்கள் தாய் சாதியின் அடிப்படையிலும் தங்கள் குழந்தைக்கு சாதி சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு இந்த புதிய அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான் ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என EMIS தரவுத்தளத்தில் உரிய திருத்தம் செய்து புதுப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் (Adi Dravidar and Tribal Welfare Department - Letter from the Commissioner of School Education to amend and update the EMIS database as Devendra Kula Velalar under the same name by merging Kalladi, Kudumban, Pallan, Pannadi and Vadiriyan) ந.க.எண்: 031562/எப்/இ2/2021, நாள்: 05-10-2021...



 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான்  ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என EMIS தரவுத்தளத்தில் உரிய திருத்தம் செய்து புதுப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் (Adi Dravidar and Tribal Welfare Department - Letter from the Commissioner of School Education to amend and update the EMIS database as Devendra Kula Velalar under the same name by merging Kalladi, Kudumban, Pallan, Pannadi and Vadiriyan) ந.க.எண்: 031562/எப்/இ2/2021, நாள்: 05-10-2021...


இணைப்பு: 

  1. அரசு நேர்முக கடித எண்‌ 10373/ சா.மெ.1/2021-1, நாள்‌: 20.07.2021.
  2. அரசாணை(நிலை) எண்‌.50 ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை, நாள்‌: 01.06.2021.
  3. அரசு நேர்முக கடித எண்‌ 8968/ சா.மெ.1/2021-1, நாள்‌:10.06.2021.
  4. அரசு நேர்முக கடித எண்‌ 9743/ சா.மெ.1/2021-1, நாள்‌: 29.06.2021.


மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate), சாதிசான்றிதழ் (Community Certificate) காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் : அமைச்சர் இராமச்சந்திரன் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021......

 பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ / மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021...


மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடமிருந்து, வருமான சான்றிதழ் / சாkதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித கால தாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை  மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை  கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும்.


சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...