>>> நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு...
கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித் துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ( தற்போதைய நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர்) பிரதீப் யாதவ் IAS, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிச்சாமி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாபுலா ஆண்டோ ஆகியோருக்கு இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - வரும் 9ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சரணடைய உத்தரவு...