கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ (SMC) மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...

 

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...


மின்னஞ்சல்‌:

ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை.5.

முன்னிலை:திரு.த.ஆனந்த்‌, இ.ஆ.ப..


ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌. 28.08.2023


பொருள்‌: ஆசிரியர்‌ பணியமைப்பு - கல்வி - பள்ளிகள்‌ - ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (ப) எண்‌: 198, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌(ஆதிந:7)துறை, நாள்‌:14.08.2023.

2. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அரசு கடிதம்‌ (நிலை) எண்‌. 38/-ஆதிந7/2022, நாள்‌: 10.03.2023.


ஆணை:

பார்வை ஒன்றில்‌ காணும்‌ அரசாணையில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மேல்நிலை / உயர்நிலை , நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ / பதவி உயர்வு மூலம்‌ நிரப்பிடும்‌ வரை அல்லது இக்கல்வியாண்டில்‌ எது முன்னரோ அது வரையில்‌ மாணாக்கர்களின்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ பொதுத்தேர்வு எழுதும்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார்‌ செய்வதற்கு ஏதுவாகவும்‌, ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ 2016 பிரிவு 19இன்படி முற்றிலும்‌ தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


பார்வையில்‌ காணும்‌ அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர்‌ நல நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள்‌, (இணைப்பில்‌ தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்‌) பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தற்காலிகமாக ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/.. மாதத்தொகுப்பூதியத்தில்‌ கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...