கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2023 - School Morning Prayer Activities...

      


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :250


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.


விளக்கம்:


தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.


பழமொழி :

Blessings are not valued till they are gone


நிழலின் அருமை வெயிலில் தெரியும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள் உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை

நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்


– அன்னை தெரசா


பொது அறிவு :


1. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி


2. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி


English words & meanings :


 Fahrenheit - a scale of temperature

வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி

டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.


Fake - false one. பொய்யான



ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.



ஆகஸ்ட்31


மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 


மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 


இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.


நீதிக்கதை


ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.


நீதி :


ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.


இன்றைய செய்திகள்


31.08.2023


*ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி. சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பாக ஆதித்யா- எல் இயங்கும். இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சி ஆகும்.


*உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.


*தண்டவாள சீரமைப்பு பணியால் அரக்கோணம் - சென்னை ரயில்கள் ரத்து.


*2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்.


*உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.


*யூ. எஸ். ஓபனில் மோசமான தோல்வியை சந்தித்தார் - வீனஸ் வில்லியம்ஸ்.


Today's Headlines


*Rehearsal over: Aditya L-1 ISRO is in action getting ready to fly.  Aditya-L will operate as an observatory to study the Sun.  This is a new initiative for India.


 *In Uttar Pradesh, a man spent 12 years building a two-storey house with 11 rooms underground.


 *Arakkonam-Chennai trains were canceled due to track maintenance work.


 *Air pollution in Chennai to increase by 27 percent by 2030- study informs.


 * World Cup chess tournament silver medalist

 Pragnananda received a grand welcome at the Chennai airport.


 *U.  S.  Worst loss in Open - Venus Williams.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...