கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :255


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.


விளக்கம்:


இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.


பழமொழி :

Carry not coal to New castle


கொல்லன் தெருவில் ஊசி விற்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


ஒரு நல்ல ஆசிரியர் தன்னால் முடியாததைக் கூட மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியும். – ததேயஸ் கோட்டார்பின்ஸ்கி


பொது அறிவு :


1. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?


விடை: 1947


2. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ


English words & meanings :


 gasoline - petrol கல் எண்ணெய் (பெட்ரோல்)

 amidol - photographic developer நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி


ஆரோக்ய வாழ்வு : 


சோம்பு: சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.


நீதிக்கதை


 தாய் சொல் தட்டாதே


ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.


வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.


அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.


குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.


"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….


எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..


ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.


வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாfவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.


இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.


தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.


இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.


தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.


"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.


‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?


"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.


இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.


இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.


தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.


அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.


இன்றைய செய்திகள்


07.09.2023


*மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்துச் செல்ல தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் -இன் ஸ்டார்சிப்  விண்கலம்.


*நிலவில் சந்திராயன்- 3 லேண்டரை படம் பிடித்த நாசா செயற்கைக்கோள்.


*ஜி20 மாநாடு டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


*விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19ஆம் தேதியிலிருந்து புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்.


*இந்திய 

வீராங்கனையின்

உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை 215 கிலோ பளுதூக்கி சாதனை படைத்துள்ளார்.


* சென்னையில் மூத்தோர் டென்னிஸ் போட்டி 11ஆம் தேதி தொடக்கம் பரிசுத்தொகை ரூபாய் 2.10 லட்சம்.


Today's Headlines


*SpaceX's Starship spacecraft is ready to take humans to Mars.


 *NASA satellite image of Chandrayaan-3 lander on the moon.


 * G20 conference announces holiday for schools and colleges in Delhi.


 *Parliament session in the new building from 19th onwards on the occasion of Vinayagar Chaturthi.


 * The Chinese woman weight lifer broke the world record of Indian woman weight lifer. She has set a record by lifting 215 kg.


 * Chennai senior's tennis tournament starting on 11th prize money Rs 2.10 lakh.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...