கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : தவம்


குறள் :267


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.


விளக்கம்:


நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.


பழமொழி :

Delay is dangerous


தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி.



பொன்மொழி :


பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார் 


பொது அறிவு :


1. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆப்பிரிக்கா 


2. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?


விடை: 33


English words & meanings :


 purgation- cleansing தூய்மையாக்கல். 

nervation- arrangement of nerves in leaf இலை நரம்பு அமைப்பு


ஆரோக்ய வாழ்வு : 


 கொண்டைக்கடலை: நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது. 


செப்டம்பர் 26


மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்


மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்


1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.


நீதிக்கதை


 The Fox And The Crab நரியும் நண்டும்  கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு.


ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு. வெளி உலக ரசித்தது  நண்டு. கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு.அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி.ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு ,அந்த நரியோட விளையாடி என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு.


ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல,


 இப்ப அந்த நண்ட தின்னுச்சு . தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு.


இன்றைய செய்திகள்


26.09.2023


*கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை -  கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. 


*சென்னை திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட மூன்று மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரயில்.


* ஆந்திர 

தடுப்பணைகள் நிரம்பியது: கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.


* இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளா மாநிலம் முன்னணி: கேரளாவுக்கு மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது.


* ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி :

19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.


* ஆசிய விளையாட்டு 2023 : 

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.


Today's Headlines


*No new cases of Nipah virus in Kerala - Kozhikode is back to normal.


 *Vande Bharat train between Chennai and  Tirunelveli reaches it's destination three hours earlier than omni bus.


 *Andhra Pradesh

 Barrages full: Heavy rains cause flooding in Palaru.


 * Kerala state is leading in providing free treatment: Kerala has been receiving Arogya Manthan award by the central government.  Kerala state  won the award this year too.


 * Asian Games Women's Cricket Final:

 India won by 19 runs.


 * Asian Games 2023 :

 India's Pratap Singh Tomar won bronze in shooting.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...