கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவத்திற்குரிய பயிற்சி நடைபெறும் தேதிகள் மாற்றம் - முதல் பருவத்திற்கு தொகுத்தறி தேர்வு நடத்துதல் - தொடர்பான திருத்தி அமைக்கப்பட்ட - SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Change of training dates for term 2 - Conduct of Summative examination for term 1 - Changes made regarding - SCERT & DEE Directors joint Proceedings) ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023...

 

 எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவத்திற்குரிய பயிற்சி நடைபெறும் தேதிகள் மாற்றம் - முதல் பருவத்திற்கு தொகுத்தறி தேர்வு நடத்துதல் - தொடர்பான திருத்தி அமைக்கப்பட்ட - SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Change of training dates for term 2 - Conduct of Summative examination for term 1 - Changes made regarding - SCERT & DEE Directors joint Proceedings) ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023...


>>> SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 எண்ணும் எழுத்தும் 

EE EXAM AND SCERT EE TRAINING UPDATE 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண்.2411/ எஃப்2/ 2021, நாள். 18 .09. 2023


பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு - தொகுத்தறி மற்றும் வளரறி மதிப்பீடு (ஆ) நடத்துதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுதல் சார்ந்த திருத்தி அமைக்கப்பட்ட சுற்றறிக்கை - சார்ந்து


எண்ணும் எழுத்தும் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 அன்று முதல் 27.09.23 வரை செயலி மூலம் நடத்திட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவரவர் நிலைக்கேற்றவாறு 5 கேள்விகள் மட்டுமே செயலியில் இடம்பெறும்.


நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத் தேர்வாக (pen and paper test) மட்டுமே 20.09.23 முதல் 27.09.23 வரை மேற்கொள்ள வேண்டும். எழுத்து தேர்விற்கான வினாத்தாள்கள் Pdf வடிவில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்களை செயலியில்


பதிவிறக்கம் செய்து தொகுத்தறி மதிப்பீட்டினைமேற்கொள்ளலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் தோறும் நடைபெற்ற வளரறி மதிப்பீடு (ஆ)FA(b) இரண்டாம் பருவம் முதல் பதினைந்து (15) நாட்களுக்கு ஒரு முறை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 முதல் 27.09.23 வரை நடைபெறுவதால் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியின் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 04.10.23 முதல் 06.10.23 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் 09.10.23 முதல் 11.10.23 வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ் அறிவிப்பினை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


இயக்குநர்  தொடக்கக்கல்வி இயக்ககம்


இயக்குநர்


மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்



>>> SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...