கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :289


அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.


விளக்கம்:


அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.


பழமொழி :

Experience is the best teacher


அனுபவமே சிறந்த ஆசான்



இரண்டொழுக்க பண்புகள் :


1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.


2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.



பொன்மொழி :


நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!



பொது அறிவு :


1. ‘‘தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?


விடை: ஆஸ்திரேலியா


2.  கொனார்க்கில் அமைந்துள்ள கோவில் எது?


விடை: சூரியனார் கோவில் 



English words & meanings :


 obsolete - no longer in use வழக்கொழிந்த, நீண்ட நாட்களாக பயனற்ற.

obviously- clearly வெளிப்படையாக


ஆரோக்ய வாழ்வு : 


மாம் பூ: உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும்.


நீதிக்கதை


 ஜப்பான் தேசத்தில், நூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு வயது எட்டுக்குள் இருக்கும். அந்த வயதில் அவனுக்கு பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் மிகப்பெரிய வெறுப்பு இருந்தது. ஆசிரியர்கள் என்றாலே பயமுறுத்தும் உயிரினங்கள் என்றே அவன் அகராதியில் இருந்தது.


அன்று புது ஓவிய ஆசிரியர் டாய்ச்சிகோவா வருகிறார் என்று அனைவரும் பரபரப்பாக இருந்தனர். இவனும் டாய்ச்சிகோவாவை பயத்துடன் எதிர்பார்த்திருந்தான்.ஆசிரியர் டாய்ச்சிக்கோவா உள்ளே வந்தார். மாணவர்கள் எழுந்து பணிந்தார்கள். அனைவரையும் அவர் அமரச் சொன்னார். மாணவர்களை ஓவிய நோட்டுகளையும் கலர் பென்சில்களையும் எடுக்கச் சொன்னார்.


‘‘உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை வரைந்து கொள்ளுங்கள். அருகில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். உங்கள் ஓவியத்தை மட்டும் ரசித்து செய்யுங்கள்’’ என்று கட்டளையிட்டார்.


இதைக் கேட்ட சிறுவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக ஓவிய ஆசிரியர்கள் கரும்பலகையில் ஒரு படத்தை வரைந்து, அதையே காப்பியடித்து மாணவர்களை வரையச் சொல்வார்கள். ஆனால் ஆசிரியர் டாய்ச்சிகோவா ‘சுயமாக படைத்துப் பாருங்கள்’ என்கிறார். இந்த விடுதலையே அவனை பரவசம் ஆக்கியது.சட்டென்று கலர் பென்சில்களை எடுத்து அவனால் என்ன படைக்க முடியுமோ அதை சுயமாக படைக்கிறான். ஓவியம் ஓரளவுக்கு உயிர்பெற்றது. ஆனாலும் அவனுக்கு ஏதோ குறை இருந்தது போல தெரிந்தது.


உடனே எச்சில் தொட்டு சில வண்ணங்களின் மீது வைத்து மெல்ல தேய்த்தான். அது வித்தியாசமான வண்ண நிழல் உருவமாக நோட்டில் விழுந்தது. அனைவரும் வரைந்து முடித்த பிறகு ஆசிரியர் டாய்ச்சிகோவா அனைத்து ஓவியங்களையும் வாங்கி சுவரில் ஒட்டினார். ஒவ்வொருவர் வரைந்த ஓவியத்தையும் தனித்தனியாக மொத்த வகுப்பே ஆராய்ந்து விவாதித்தது.


இச்சிறுவனின் ஓவியம் விவாதத்துக்கு வந்தபோது வகுப்பில் இருந்த மாணவர்கள் சிரித்தார்கள். ஆசிரியரோ அனைவரையும் கண்டித்தார். கண்டித்து விட்டு அந்த ஓவியத்தை மாணவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார். ‘இப்படி ஈரம் தொட்டு வண்ணத்தைத் தேய்த்து விட்டது அருமை’ என்று புகழ்ந்தார். ‘இப்படித்தான் படைப்பை சுயமாக ரசித்து படைக்க வேண்டும். யாராவது செய்வதைப் பார்த்து செய்வது படைப்புத் திறன் ஆகாது’ என்று சிறுவனுக்குச் சொன்னதன் மூலம் மொத்த வகுப்புக்கும் சொன்னார். மேலும் அந்த வகுப்பில் அன்று வரைந்த ஓவியங்களில் மிகச் சிறந்த ஓவியமாக அதையே தேர்ந்தெடுத்து அவனைப் பாராட்டினார்.


அன்றிலிருந்து அச்சிறுவன் எதைப் படைக்கும்போதும் வேறு யாரையும் கவனிப்பதில்லை. தன் சுய சிந்தனையையும் உணர்வையும் கொண்டே படைத்தான்.


பிற்காலத்தில் வளர்ந்து உலகின் மிகச் சிறந்த இயக்குநர் ஆனார். தான் எடுக்கும் திரைப்படங்களின் கதையையும் காட்சியமைப்பையும் யாராலும் யூகிக்கவே முடியாதவாறு வாழ்நாள் எல்லாம் நல்ல நல்ல திரைப்படங்களை எடுத்தார். உலக திரைப்படங்களில் மாபெரும் பாய்ச்சலையும் விவாதங்களையும் நிகழ்த்தினார். இப்போதும் திரைப்படம் கற்றுக் கொள்ள வரும் மாணவர்கள் தனித்தன்மையான திரைப்படங்களை எவ்வாறு எடுப்பது என்பதை அவரது திரைப்படங்களைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். உலகின் எந்த மூலையில் பிறந்த திரைக்கலைஞர்களும் இவர் பெயரைச் சொன்னால் போற்றிப் புகழ்வார்கள்.


அவர்தான் உலகின் தலைசிறந்த இயக்குநரான அகிரா குரோசோவா.


ஓர் ஆசிரியர் சிறுவயதில் கொடுத்த நம்பிக்கை இப்படி ஒரு மகா கலைஞனை உருவாக்கி இருக்கிறது. குழந்தைகளை சுயமாக யோசிக்க சொல்வதைப் போல அவர்களுக்குச் செய்யும் சிறந்த நன்மை எதுவுமில்லை.


ஒருவேளை அன்று ஆசிரியர் டாய்ச்சிகோவா ஓர் ஆப்பிள் படத்தை வரைந்து, ‘இதைத்தான் காப்பி அடித்து அனைத்து மாணவர்களும் வரைய வேண்டும்’ என்று கண்டிப்போடு இருந்திருந்தால் உலகத்துக்கு அகிரா குரோசோவா கிடைக்காமலேயே போயிருப்பார்.



இன்றைய செய்திகள்


02.11.2023


*தென்னாப்பிரிக்காவில் உள்ள வி.ஜி.பி உலகத் 

தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9அடி உயரமுள்ள 157 வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் 

வி.ஜி. சந்தோஷம் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.


*"விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" பற்றிய புத்தகம் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.


*அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி  வருவாய் ரூபாய் 1.72 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


*கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கருக்கு வான்கடே ஸ்டேடியத்தில் சிலை வைக்கப்பட்டது.


*ஓய்வு முடிவை அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி.


Today's Headlines


*In South Africa, VGP founder V G  Santhosh opened the 157th Thiruvalluvar statue 9 feet high through video conference on behalf of the World Tamil Society.


 *The book "Tamil Nadu's Contribution to Freedom Struggle" was published by M.K Stalin.


 *GST income increased to Rs 1.72 lakh crore in October.


 *Statue of Cricket legend Tendulkar is unveiled at Wankhede Stadium.


 *England fast bowler David Willey announced his retirement.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...