கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள்: 



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:308


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.


விளக்கம்:


தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.



பழமொழி :

Great minds think alike


பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.



பொன்மொழி :


வெற்றி வந்தால்

நம்பிக்கை வரும்.

ஆனால் நம்பிக்கை

இருந்தால் மட்டுமே

வெற்றி கிடைக்கும்..

அதனால் நம்பிக்கையை

மனதில் வளர்த்துக்கொள்



பொது அறிவு :


1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?

விடை: நெருப்புக்கோழி


2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 

சுப்பீரியர் ஏரி.



English words & meanings :


 Equipoise - equality of distribution சரி சம நிலை

Endear - to make dear , beloved பிரியமுடையதாக்குதல்


ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ : பூசணி பூக்களை உட்கொள்வது எலும்பு தேய்மானம் அல்லது தாது சத்து இழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.



நீதிக்கதை


 அகந்தை ஆபத்தானது.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் யார் இரை தேடுவது என்பதில் இரண்டு சேவல்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதலில் தோற்றுப் போன சேவல் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொண்டது.


வெற்றி பெற்ற சேவலோ பெருமிதத்துடன் பறந்து ஒரு சுவர் மீது ஏறி நின்று இறக்கைகளைப் படபட என அடித்துக் கொண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தம் போட்டு மகிழ்ச்சி கொண்டாடியது.


அப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு அதன் மேல் பாய்ந்து கவ்விக் கொண்டு சென்றது. பதுங்கியிருந்த சேவல் மூலையை விட்டு வெளியே வந்து போட்டிக்கு யாரும் இல்லாததால் தன்னிஷ்டப்படி இரை தின்றது.


நீதி : அகந்தை கொள்வது எப்பொழுதும் ஆபத்தானது.



இன்றைய செய்திகள்


28.11.2023


*வாக்காளர் பட்டியல் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்; சத்யபிரதா சாகு தகவல்.


*சுரங்கத்தில் சிக்கியவர்களுடன் உரையாடிய பிரதமரின் முதன்மைச் செயலர்.


* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை- காவல்துறை தலைமை.


* வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.


* ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள்: ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா; குஜராத்துக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிப்பு.



Today's Headlines


*15.33 lakh applications for voter list;  Satyaprada Sakhu information.


 *Prime Minister's Principal Secretary interacts with mine victims.


 * War on terrorism is not completely over in Jammu and Kashmir- Police chief.


 * A low pressure area has formed in the Bay of Bengal, there is a chance of rain in Tamil Nadu till the 3rd.


 * Players for IPL Cricket Tournament: Auction will be held on 19th December.  Hardik Pandya in Mumbai team;  Subman Gill announced as new captain for Gujarat.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...