கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் (The low pressure area that has formed over Southeast Bay of Bengal will strengthen into a low pressure zone today)...



 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் (The low pressure area that has formed over Southeast Bay of Bengal will strengthen into a low pressure zone today)...


 "வரும் 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகர கூடும்"


வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...


* தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஏற்கனவே ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


 நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 27 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 23 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என தகவல்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் Tourists narrowly escape from elephants durin...