விவோ செல்போன் நிறுவனம் மீது ரூ.62,476 கோடி பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது (The Enforcement Directorate has filed a charge sheet against Vivo Cell Phone Company in the Rs 62,476 crore money laundering case)...



விவோ செல்போன் நிறுவனம் மீது ரூ.62,476 கோடி பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது (The Enforcement Directorate has filed a charge sheet against Vivo Cell Phone Company in the Rs 62,476 crore money laundering case)...


இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணம் அனுப்பப்பட்டதாக சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


கடந்தாண்டு, இந்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில், இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக அனுப்பியதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது.


செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவின் மீது பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


சீனாவை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ இந்தியாவின் (vivo india) மீது பணமோசடி விவகாரத்தின் கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


கடந்த ஆண்டு அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்தியாவில் வரிப்பணத்தைக் கட்டுவதைத் தவிர்க்க, விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்டவிரோதமாக அனுப்பியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதில் பல சீனர்களும், இந்திய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.


இதுதொடர்பாக, லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் இயக்குநர் ஹரி ஓம் ராய், சீனாவைச் சேர்ந்த அலியாஸ் ஆன்ட்ரூ மற்றும் 2 பட்டயக் கணக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணை ஆவணங்களில் தெரிவித்துள்ளது.


மேலும், லாவா நிறுவனம் விவோவுடன் இணையும் பேச்சுவார்த்தைகள் பத்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சீன நிறுவனம் அல்லது, விவோ நிறுவனத்துடன் எந்த பண பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவில்லை என லாவா நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...