கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...



 காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...


சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, "சென்னையின் 6 மண்டலங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று மின்சாரம் வழங்கப்படும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளது.


பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது. வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.


வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும். ஒருசில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று இரவு அல்லது நாளைக்குள் அகற்றப்படும். வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. 95% அதிகமான பகுதிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன.



நேற்று நிவாரண முகாம்களில் 41,406 பேர் இருந்தனர். இன்று 18,780 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று 800 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாக புகார்கள் வந்தன. இன்று 343 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் 0.43% மட்டுமே மின்வெட்டு உள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் செயல்பட தொடங்கிவிட்டன. சென்னையில் 488 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அதில் 39 வழித்தடத்தில் மட்டுமே சிறிது நீர் உள்ளது. எனினும் அங்கும் போக்குவரத்து சீராக உள்ளது" என்றார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...