கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Formation of special teams to provide food and relief items to flood affected Thoothukudi and Tirunelveli districts – Tamil Nadu Government Announcement)...


 தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் கவனத்திற்கு - அரசு வெளியிட்ட அறிவிப்பு


கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.


இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள், ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;


1. செல்வி. இரா. ஐஸ்வர்யா, இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830


2. திரு. ஓ. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803


3. திருமதி. எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155


இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., தொலைபேசி எண். 9442218000. அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.


1. திரு. சீ. கிஷன் குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண். 9123575120


2. திருமதி. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி எண். 9940440659


இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், திருமதி. பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் செயல்படுவார்.


நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...